பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 - மனை விளக்கு :

னென்று சொன்னேன். நம்மை விரும்பி வந்து, தன் விருப்பம் நிறைவேறப் பெருமையால் வருந்துகிருன் என்றும் கூறினேன். அவற்றை நீ காதில் வாங்கிக் கொள்ளவில்லை. என் வார்த்தைகளில் உள்ள கருத்தை நீ தெளியவில்லை. இதுவரையில் நீ இப்படி

இருந்ததில்லையே!

தலைவி : என்ன என்ன செய்யச் சொல்கிருய்?

தோழி : என் வார்த்தைகளில் உனக்கு நம்பிக்கை இல்லை. நான் சொல்வதைச் சோதித்துப் பார்க்கும் வழக்கத்தை இப்போதுதான் உன்னிடம் காண் கிறேன். அந்த மலைகிழவோன் நிலையை நீயே தெரிந்து கொள். நான் சொல்வதுதான் உனக்குப் பிடிக்க வில்லை. நீயே நேரில் தெரிந்து கொண்டு, உனக்கு நன்மை செய்ய எண்ணியிருக்கும் வேறு தோழிய ரோடும் கலந்து யோசித்துப்பார். இன்னது செய்வது தான் அறிவுடைமை என்று தேர்ந்து, பிறகு நீ அவளுேடு பழகு. எனக்குத் தெரிந்த ஒன்றை மாத் திரம் சொல்ல விரும்புகிறேன். அவன் எளிதிலே மறுப்பதற்குரியவன் அல்லன். ஆழ்ந்த காதலும், தன் காதலை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஏக்கமும் உடையவகை இருக்கிருன். எப்படியோ நீ செளக்கியமாக வாழ வேண்டும். அது தான் என் விருப்பம். வாழி!

தலைவி ; ஏன் இப்படிப் பேசுகிருய்?

தோழி : எல்லாம் அவ்விடத்துப் பேச்சில் மாறுபாடு தோன்றினதால் தான். பெரியவர்கள் திடீரென்று ஒருவருடன் நண்பர்களாகி விடமாட்டார்கள். பல காலம் ஆராய்ந்து தகுதி நோக்கி நட்புப் பூண்பார் கள். நாடிய பின்பே நண்பு செய்வார்கள், அப்படி