பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியின் சினம் 83

இன்றி யோசனையில்லாமல் நட்புக் கொண்டுவிட்டு அப்புறம், நண்பர்கள் நல்லவரா, அவரோடு பழக லாமா.அவர் வார்த்தையைக் கேட்கலாமா?’ என்று ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள் நட்ட பிறகு நாடு வது அவர்கள் இயல்பு அல்ல. தம்மோடு ஒட்டி நட்ட வர்கள் திறத்தில் பெரியோர்கள் இன்னவாறு நடந்து கொள்வார்கள் என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும். தோழியரோடு பழகினலும் இந்த நட்பிலக்கணத்தை நன்கு அறிந்து வைத்தல் நல மென்று எனக்குத் தோற்றியது; சொன்னேன். விருப்பம் இருந்தால் ஏற்றுக் கொள். இல்லையாளுல் உன் விருப்பப்படியே நடந்து கொள். உனக்கு அறி வுரை கூற நான் யார்?

கோபம் கொப்புளிக்கும் இந்தப் பேச்சைத் தலைவி

கேட்டாள். தன் பிழையை உணர்ந்தாள். கட்டு காடும் பேதைமை தன்னிடம் இருக்கக் கூடாது என்பதைத் தெளிந்தாள். அதன் பயன் என்ன? தோழியின் துணை கொண்டு காதலனைச் சந்திக்கும் நிலை அமைந்தது.

தோழி சினந்து கூறும் கூற்ருக அமைந்திருப்பது பின்

வரும் பாட்டு

"மாயோன் அன்னமால்வரைக் கவாஅன் வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி அம்மலை கிழவோன் கம்கயந்து என்றும் வருந்தினன் என்பதோர் வாய்ச்சொல் தேருய், யுேம்கண்டு நூமரொடும் எண்ணி அறிவறிந்து அளவல் வேண்டும்; மறுதரற்கு அரியன்; வாழி தோழி! பெரியோர் காடி நட்பின் அல்லது கட்டு நாடார், தம் ஒட்டியோர் திறத்தே

  • தோழி, திருமாலைப்போன்ற பெரிய தாழ்வரைகளை

யும், பலராமனப்போன்ற விளங்கிய வெள்ளிய அருவியை