பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii மன விளக்கு

இவ்வாறு யாரும் அறியாமல் காதல் செய்வதற்குப் பல இடையூறுகள் ஏற்படுகின்றன. அவற்ருல் மனம் வாடிய தலைவியைக் கண்ட தோழி, தலைவன் தலேவியை மணந்து கொண்டு வாழ்வதே தக்கதென்று நினைக் கிருள். தன் கருத்தைக் குறிப்பாகத் தலைவனுக்குத் தெரிவிக் கிருள். அவன் அதனை ஏற்துக் கொண்டு, கல்பாணத்தின் பொருட்டுப் பொருள் தேடப் பிரிகிருன். அப்பொழுது அவன் பிரிவால் தலைவிக்குத் துயரம் உண்டாகிறது.

தலைவன் மணம் செய்து கொள்வதற்குரிய முயற்சி களைச் செய்கிருன். அவனைத் தலைவியின் தாய் தந்தையர் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்ருே, வேறு யாருக்கேனும் அவளை மணஞ் செய்து கொடுக்க எண்ணியிருக்கின்றனர் என்ருே தெரிய வந்தால், தலைவி ஒரு தலைவனிடம் ஈடுபட்டிருக்கிருள் என்பதைத் தோழி அவர்களுக்குக் குறிப்பாகப் புலப்படுத்துவாள். அதனை உணர்ந்து அவர் கள் தலைவனுக்கு அவளை அளிக்க உடம்படுவார்கள்.

சில சமயங்களில் அவர்கள் உடம்படாவிட்டால் தலைவன் தலைவியை ஒருவரும் அறியாமல் அழைத்துக் கொண்டு தன் ஊர்சென்று அங்கே அவளை மணந்து கொள் வான். அவர்கள் போன பிறகு தலைவியின் உண்மைக் காதலை அறிந்த தாயும் செவிலியும் வருந்துவார்கள். செவிலித்தாய், நான் போய் என் மகள் எங்கிருந்தாலும் அழைத்து வருகிறேன்’ என்று புறப்படுவாள். இதுவரை யில் உள்ளது களவு என்ற பிரிவு.

காதலர் இருவரும் மணம் புரிந்து கொண்டு கணவன் மனேவியாக வாழ்வார்கள். அப்போது சில காரியங்களுக் காகக் கணவன் தன் வீட்டை விட்டுச் சென்று சில காலம் தலைவியைப் பிரிந்திருப்பான். அந்தப் பிரிவால் இருவருக் கும் வருத்தம் உண்டாகும். இல்லறத்தை வளப்படுத்தும் பொருட்டுப் பொருள் தேடத் தலைவன் பிரிவது உண்டு. கல்வி கற்கப் பிரிவது உண்டு. அரசனுக்குத் துாதுவகை நின்று துாது உரைப்பதற்காகவும், போரில் துணை புரிவதற் நாட்டைக் காப்பதற்காகவும் பிரிந்து செல்வது @-Gö”{B},