பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை Wii

ஒரு வகையான சோர்வு இருப்பதை உணர்ந்து, என்ன காரணம் என்று வினவுகிருன் தான் ஒரு மங்கையின் காதல் வலையிற் பட்டிருப்பதை அவன் எடுத்துச் சொல் கிருன். பாங்கன் அம் மங்கை நல்லாள் இருக்கும் இடத் தைத் தலைவன் வாயிலாக அறிந்து, அவ்விடம் சென்று அவளை அறியாமல் அவளைக் கண்டு அவள் தலைவனுக்கு எவ்வகையாலும் ஏற்றவளே என்பதை உணர்ந்து மீண்டு வந்து தலைவனிடம் சொல்கிரு:ன்.

மீண்டும் தலைவனும் தலைவியும் சந்தித்து அளவளாவு கிரு.ர்கள். தலைவி தன் உயிர்த் தோழி இன்னுள் என்பதைக் குறிப்பால் தலைவனுக்குப் புலப்படுத்த அவன் அவளைத் தங்கள் காதல் வாழ்க்கைக்குத் துணையாகக் கொள்ளலாம் என்று நினைக் கிருன் அவளே அணுகித்தான் தலைவியி னிடம் காதல் பூண்டுள்ளதைத் தெரிவிக்கிருன். தோழி ஏதேதோ காரணங் கூறி அவனை மறுக்கிருள். மீண்டும் மீண்டும் தன் காதலின் ஆழத்தைத் தலைவன் புலப்படுத்து வதோடு, தலைவிக்கும் தனக்கும் தொடர்பிருப்பதையும் குறிப்பிக்கிருன், அப்பால் தோழி அவன் உண்மைக் காதலன் என்று தேர்ந்து, தலைவியினிடம் அவன் காதலைப் பற்றிச் சொல்கிருள். முதலில் தலைவி ஒன்றும் அறியாத வள்போல் இருக்கிருள். அப்பால் மறுப்பவளைப்போலப் பேசுகிருள். தோழி மேலும் வற்புறுத்தவே, தலைவி ஒப்புக் கொள்பவளைப் போலப் பேசுகிருள். அதுமுதல் தோழி யின் துணையைக் கொண்டே பகற் காலத்தில் திணைப்புனத் திலும வீட்டுக்குப் புறம்பான வேறிடங்களிலும் தன் காதலனைச் சந்தித்து வருகிருள். இடையில் சில நாள் அவனைச் சந்தக்க முடியாமற் போகின்றது. அப்பொழு தெல்லாம் அவள் மிக்க துன்பத்தை அடைகிருள்.

தினைப்புனத்தைக் காத்தல், பூக் கொய்தல் முதலி

வற்றுக்காக வீட்டுக்குப் புறத்தே வந்து செல்லும் தலைவியை அவளுடைய தாய் வீட்டிலே இருக்கும்படி சொல்லிக் கட்டுப்பாடு செய்கிருள். அதைத் தோழி வாயிலாக அறிந்த தலவன் அத்தோழியின் உதவி பெற்று இரவுக் காலங் களில் வந்து யாரும் அறியாமல் தலைவியைச் சந்தித்துச் செல்கிருன். இந்த இரவுச் சந்திப்புக்கும் சில நாட்கள் தடை நிகழும் அப்பொழுது தலைவி தலைவனே க் காணுது வருந்துவாள்.