பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

உணர்ச்சியைத் தலைமையாகக் கொண்டு, காதலன் காதலியரிடையே நிகழ்வனவற்றைச் சொல்வது அகப் பொருள். செயலைத் தலைமையாகக் கொண்டு உலக வாழ்க்கையில் பிறதுறைகளில் நிகழும் செய்திகளைச் சொல்வது புறப்ப்ொருள். காதல் அல்லாத பிற எல்லாம் புறமே ஆளுலும், பெரும்பாலும் புறத்துறைப் பாடல்கள் வீரத்தைச் சார்ந்தே இருக்கக் காணலாம்.

காதலனும் காதலியும் அன்புசெய்யும் ஒழுக்கம் இரண்டு வகைப்படும். கல்யாணம் செய்து கொள்வதற்கு முன் பிறர் அறியாமல் காதல் செய்வதைக் களவொழுக்கம் என்றும், மணத்தின் பின்னர்க் கணவன் மனைவியராக வாழும் வாழ்க்கையைக் கற்பொழுக்கம் என்றும் சொல் வார்கள். கதைபோலத் தொடர்ந்து வரும் காதல் வாழ்க்கையில் பல பல கட்டங்கள் உண்டு. ஒவ்வொரு கட்டத்திலும் பல நிகழ்ச்சிகள் இருக்கும். தனித் தனி நிகழ்ச்சியைச் சொல்லும் பகுதியைத் துறை என்று கூறுவர்கள். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு துறையில் அமைந்திருக்கும். ஒவ்வொன்றும் காதலன், காதலி, தோழி முதலியவர்களில் யாரேனும் ஒருவருடைய கூற்ருக இருக்கும். காதலனைத் தலைவனென்றும், காதலியைத் தலைவியென்றும் சொல்வது மரபு. தோழியைப் பாங்கி என்றும், தோழனைப் பாங்கன் என்றும், பெற்ற தாயை நற்ரு ய் என்றும், வளர்த்த தாயைச் செவிலி யென்றும் சொல்வார்கள்.

பிறருடைய உதவியும் தூண்டுதலும் இல்லாமல் அழகும் அறிவும் சிறந்த தலைவன் ஒருவன் தன் தகுதிக்கு ஏற்ற அழகி ஒருத்தியைத் தனியிடத்திலே சந்திக்கிருன். அவர்கள் ஒருவரோடு ஒருவர் காதல் கொண்டு அள வளாவுகிரு.ர்கள். மறுநாளும் அப்படியே தனியிடத்தில் சந்திக்கிரு.ர்கள். பிறகு தலைவியைப் பிரிந்து சென்ற தலைவனைப் பாங்கன் காண்கிருன், அவனிடத்தில் ஏதோ