பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

பொருளைச் சார்ந்து ஐந்து திணைகளையும் பற்றித் தனித் தனியே நூறுநூருக ஐந்து புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுதி. பதிற்றுப்பத் என்பது சேர அரசர்கள் பத்துப் பேர்மேல் பத்துப் பத்துப் பாட்டாகப் பத்துப் புலவர்கள் பாடிய நூறு பாட்ல்கள் அடங்கியது. பரிபாடல் அந்தப் பெயருள்ள பாவகையால் அமைந்த பல புலவர்களின் பாடல்தொகுதி. ஐந்து திணை பற்றி ஐம்பெரும் புலவர்கள் தனித்தனியே கலிப்பாவாகப் பாடிய பாடல்கள் அமைந்த நூல் கலித் தொகை. புறப்பொருள் பற்றிய நானுாறு செய்யுட்களை உடையது புறநானூறு. அகப்பொருள் பற்றிய மற்றப் பாடல்களைத் தொகுத்து அடிக் கணக்குப் பண்ணிஞர்கள். சிறிய பாட்டுகளைத் தொகுத்து அவற்றைக் குறுந்தொகை யென்ற பெயரோடும், அடுத்த படி சற்றுப் பெரிய பாடல்களைத் தொகுத்து நற்றிணை என்ற பெயரோடும், பின்னும் பெரிய பாடல்களைத் தொகுத்து அகநானூறு என்ற பெயரோடும் உலவ விட் டனர் நாலடி முதல் எட்டடிவரையில் உள்ள பாடல்கள் நானு று குறுந்தொகையில் இருக்கின்றன. ஒன்பதடி முதல் பன்ன்ரண்டடி வரையில் உள்ள பாடல்கள் நானுாறு நற்றிணையில் உள்ளன. பதின்மூன்றடி முதல் முப்பத்தோரடி வரையில் உள்ள பாடல்களை அகநானூற் றில் காணலாம்; அந்த நூலிலும் நானுறு பாடல்கள் இருக்கின்றன.

சங்க நூல்கள் வழக்கற்றுப்போய், அவற்றைப் படிப் பவரும் கற்பிப்பவரும் இல்லாமல் தமிழ்நாடு சில காலத்தைப் போக்கியது. என்னுடைய ஆசிரியப்பிரா ளுகிய மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் சங்க நூல் களைத் தேடித் தொகுத்து ஆராய்ந்து வழுக் களைந்து அச்சிடலாஞர்கள். பெரும் பகுதியை அவர்கள் வெளி யிட்டார்கள். அவர்களோடு பழகியவர்களும், அவர் களுடன் இருந்து ஆராய்ச்சி செய்தவர்களும், அவர்கள் நூற்பதிப்பைக் கண்டு உணர்ந்தவர்களும் சில நூல்களை வெளிப்படுத்தினர்கள். தமிழ் நாட்டில் காவியத் தமிழும் தோத்திரத் தமிழும் சமயத் தமிழும் பிரபந்தத் தமிழுமே வழங்கிவந்த காலத்தில் அவர்கள் அவதாரம் செய்து சங்கத் தமிழைப் புதையலைப் போல எடுத்து வழங்கா விட்டால் இன்று தமிழுக்குள்ள ஏற்றம் வந்திருக்குமா? ஆகவே, சங்கத் தமிழ்ச் சோலைக்குள் புகும் யாவரும் அவர்களே நன்றியறிவுடன் நினைப்பது கடமையாகும்.