உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

lv மனே விளக்கு

அங்கங்கே வழங்கிவந்தன. நாளடைவில் அவை மறந்து போய்விடுமோ என்ற அச்சம் உண்டாயிற்று. சில பாடல்கள் மறைந்துகொண்டும் வந்தன. ஆதலின், கடைச் சங்க காலத்தின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த புலவர்களும் அரசர்களும் அங்கங்கே வழங்கிய பாடல் களைத் தொகுத்து ஒழுங்கு படுத்த எண்ணினர்கள். சில அரசர், புலவர்களின் துணை கொண்டு இந்தத் தொகுப்பு வேலையைச் செய்தார்கள். பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க் கணக்கு என்று அவற்றை மூன்று வரிசையாக வகுத்து அமைத்தார்கள். பத்துப் பாட்டு என்பது நீண்ட பாடல்கள் பத்து அடங்கிய தொகுதி. திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப் படை, சிறு பாணுற்றுப்படை, பெரும்பாணுற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்ற பெயருடைய பத்து நூல்கள் அந்தத் தொகுதியில் இருக்கின்றது.

எட்டுத்தொகை என்பது எட்டு நூல்கள் சேர்ந்த வரிசை. அந்த வரிசையில் உள்ள ஒவ்வொரு நூலும் பல பாடல்களின் தொகுதி. அதனுல் இவற்றைத் தொகை நூல்கள் (Anthology) என்று சொல்வார்கள். பிற் காலத்தில் தனிப் பாடல் திரட்டு என்ற பெயருடன் சில நூல்கள் வந்துள்ளன. அவற்றைப் போன்ற திரட்டு நூல்களே இவை. பதினெண் கீழ்க்கணக்கு என்பவை பதினெட்டுச் சிறு நூல்கள் அடங்கியவை. அவற்றிற் பல, நீதிநூல்கள், திருக்குறள், பதினெண் கீழ்க் கணக்கைச் சார்ந்ததே. -

எட்டுத் தொகையைத் தொகுக்கும்போது சில வரை யறைகளை மேற் கொண்டு தொகுத்திருக்கிரு.ர்கள். காதலைப் பற்றிச் சொல்லும் அகப்பொருட் பாடல்களை யெல்லாம் தனியே தொகுத்தார்கள். அப்படியே வாழ்க் கையின் மற்றப் பகுதிகளைப் பற்றிய பாடல்களையும் தொகுத்து அமைத்தார்கள். இவ்வாறு தொகுத்துவைத்த நூல்கள் நற்றினே, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பவை. ஐங்குறுநூறு என்பது அகப்