பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X: மனை விளக்கு

தலைவன் மணம் புரிந்து கொள்ளும் ஏற்பாட்டோடு வந்திருக்கிருன் என்று தோழி கூறுவது ஒன்று; தலைவன் தலைவியை அழைத்துக் கொண்டு போவதாகத் திட்டம் போட்ட பிறகு தன் ஆயத்தாரைப் பிரிய முடியாமல் தலைவி வருந்துவதைத் தலைவனுக்குத் தோழி உரைப்பது ஒன்று; தலைவன் தலைவியை அழைத்துக் கொண்டு போகையில் அவளோடு கூறுவது ஒன்று; தலைவி தலைவ னுடன் போய்விட அதனே உணர்ந்த தாய் வருந்தி உரைப் பது ஒன்று.-இவை களவுத் துறைகள்.

இல்லறம் நடத்தும்போது பொருள் தேடும் பொருட்டுப் பிரிந்து செல்ல நினைத்த நெஞ்சை நோக்கித் தலைவன் கூறியதாக ஒரு பாட்டும், அவன் பொருள் சட்டச் செல்வதற்கு உடம்பட்ட தோழியைத் தலைவி பாராட்டிக் கூறியதாக ஒரு பாட்டும் உள்ளன-இவை கற்புக்குரிய துறைகள்.

இந்த இருவகை வாழ்க்கை நிலையிலும் உணர்ச்சி வகையில்ை ஐந்து பகுதிகள் உண்டு. தலைவியும் தலைவனும் ஒன்று பட்டு இன்பத்தில் ஆழ்வது ஒன்று; இதற்குக் குறிஞ்சித் தினே என்று பெயர். தலைவனும் தலைவியும் பிரிந்து துன்புறுதல்; இதற்குப் பாலைத் திணை என்பது பெயர். தலைவன் பிரிந்திருக்கும் காலத்தில் அவன் வருவான் என்ற நம்பிக்கையோடு தலைவி இருத்தல் முல்லைத் திணை என்ற பெயர் பெறும். தலைவன் தலைவி யைப் பிரிந்து வேறு மகளிரை நாடும்போது தலைவி ஊடல் கொள்வாள்; இது மருதத் திணை என்று பெயர் பெறும். தலைவி தலைவனே நினைந்து புலம்புதல் நெய்தல் திணை யாகும். புணர்ச்சி, பிரிவு, இருத்தல், ஊடல், இரங்கல் என்ற பெயர்களால் இந்த ஐந்து பகுதிகளையும் சுருக்க மாகச் சொல்வார்கள்.

குறிஞ்சி முதலியவை ஒழுக்க வகைகளான லும் அவை நிகழும் நிலங்களுக்கும் அந்தப் பெயர் வழங்கும். முதலில் நிலத்திற்குப் பெயர் ஏற்பட்டுப் பிறகு அந்த நிலத்தில் நடக்கும் ஒழுக் கத்துக் குப் பெயராக வந்தது. மலையும் மலை யைச் சார்ந்த இடமும் குறிஞ்சி. இந்த நிலத்தில் புணர்த லாகிய ஒழுக்கம் சிறப்பைப் பெறும். மழையுன்றி வறண்டு போன நிலம் பாலை; பிரிவு இங்கே நிகழ்வதாகச் சொன்