பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை xi

ஞல் பிரிவினது துன்ப உணர்ச்சி நன்முக வெளிப்படும். காடும் காட்டைச் சார்ந்த இடமும் முல்லை; இந்த நிலத் தில் இருத்தல் என்னும் ஒழுக்கம் நிகழ்வதாகச்சொன்னல் சிறப்பாக இருக்கும். வயலும் வயலைச் சார்ந்த இடமும் மருதம்; இது ஊடலுக்கு ஏற்ற இடம். கடலும் கடலைச் சார்ந்த இடமும் நெப்தல்; தனிமையிலே புலம்புதற்கு ஏற்ற இடம்.

சங்க நூல்களில் இயற்கை எழிலைப் புலவர்கள் மிக நன்ருக வருணித்திருக்கிருர்கள். விலங்கினங்களிடத்தும் காதல் வாழ்க்கை இருப்பதைப் புலப்படுத்தியிருக்கிருர் கள். இப்புத்தகத்தில் உள்ள பாடல்களில் குறிஞ்சி நிலத் தையும் பாலே நிலத்தையும் பார்க் கிருேம். குறிஞ்சி நிலத் தில் நன்னெடுங் குன்றம் ஓங்கி நிற்கிறது. காலையில் பெய்த மழையில்ை அருவி பெருக்கெடுத்து வீழ்கிறது அது பாயும் காடுகள் காண்பதற்கு அரிய அழகுக் காட்சியாகத் திகழ் கின்றன. காந்தள் மலரில் வண்டு மொய்த்து ஊதுகின்றது. அதன் இன்னிசை யாழொலியைப் போல இருக்கிறது. யாமத்தில் அடர மழை பெய்கிறது. மரங்கள் அடர்ந்து ஓங்கி நின்ற மால் வரை திருமாலைப் போலத் திகழ்கிறது. வெள்ளை வெளே ரென்று வீழும் அருவி பலராமனாப் போல இருக்கிறது. தறமகளிர் தினைப்புனத்தைக் காவல் புரிகிரு.ர்கள். அவர்களே ஏமாற்றிவிட்டு மந்தி தினக் கதி ரைப் பறித்துக்கொண்டு தன் கணவகிைய கடுவளுேடு மலை மேலே ஏறிப் போய்க் தினேக் திரைக் கையால் தேய்த்துத் தின்கிறது. தன் கவுளிலும் தாடையிலும் தினையை அடக்கிக் கொள்கிறது.

எங்கே பார்த்தாலும் வெப்பம் நிரம்பி அழல் கொளுந் தும் பாலை நிலத்தைச் சிவ பாடல்களில் காண்கிருேம். உலர்ந்த காந்தளும் ஒய்ந்த புலியும் ஈனும் பருந்தும் அங்கே வருகின்றன. எப்போதும் கோடைக் காலம் அங்கேயே நிரந் தாாகத் தங்கிவிட்டதோ என்று தோன்றுகிறது. வேப்ப மரத்தின்மேல் இலைகள் சுருங்கிச் சு எண்டுள்ளன. அ சுன் கீழே புள்ளி புள்ளியா த்தான் நிழல் காணப்படு கிறது. அதன் மேலே பிரசவ வேதனையோடு பருந்து தங்கி யிருக்கிறது. அந்த நிழலில் மறவர்களின் சிறுவர்கள் தாயக் கட்டம் போன்ற விளேயாட்டை ஆடுகிரு.ர்கள்; நெல்லிக் காயை உருட்டி விளையாடுகிருர்கள். கருவுயிர்த்த