பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேத முதல்வன் 3

தான் மேகங்கள் அதனிடத்தே நீரை முகந்து மழை பெய் கின்றன. கடலின் நீர் ஆழத்தால் நீலநிறமாகத் தோன்றி னும் தூய வெள்ளை நிறமுடையது. அந்த நீர் நோயை உண்டாக் காத தூய்மையை உடையது; உலகத்து அழுக் கெல்லாம் ஆற்றின் வழியாகவும் கால்வாய் வழியாகவும் தன்பால் விழுந்தாலும் தன் தூய்மை கெடாமல் இருப்பது.

கடல் ஆழமாக இருப்பதனால் அதில் சங்குகள் உண் டாகின்றன; இப்பி, சங்கு, இடம்புரி, வலம்புரி முதலிய பல வகையான சங்கங்கள் உண்டாகின்றன. சங்குக்குத் தமிழில் வளை என்று பெயர். உயிர் உள்ள சங்கு முழங்கு மாம். கடலில் மேற் பரப்பில் வந்து மேயும்போது காற்று வீசினல் சங்கில் ஒலி எழும்பும் என்றும் சொல்வதுண்டு. வளைகள் நரலும் ஒசையைக் கடற்கரையில் உள்ள நம்மால் கேட்க இயலாது. ஆனாலும் பெளவத்தில் வளைகள் நரன்று கொண்டுதான் இருக்கின்றன. கண்ணுல் கானும் தூய நீரையும் காதால் கேட்கும் வளைகள் நரலும் ஒலியையும் உடையது கடல்.

மாநிலத்தைச் சுற்றிக் கிடக்கும் இந்தத் துரநீரை யுடைய பெளவத்தை, வளை நரலும் பெளவத்தை, மாநில மடந்தையின் உடையாக வருணிப்பது புலவர் வழக்கம். மாநிலம் இறைவனுடைய திருவடிகளானல் அவற்றைச் சூழும் பெளவம் அவனுடைய உடையாகத் தோன்றுவது பொருத்தம் அல்லவா? மாநிலத்தைச் சேவடியாகக் கொண்ட இறைவன் தூநீர் வளை நரல் பெளவத்தை உடுக்கையாகக் கொண்டு நிற்கிருன்,

பாதமே இவ்வளவு விரிந்ததாளுல் அவனுடைய உடல் வண்ணம் முழுவதும் காண்பார் யார்? பூமியி லிருந்து மேலே ஓங்கி நிற்பது விசும்பு. அதன் உயரத் தையும் பரப்பையும் அளவிடுவார் யார்? மெய்யில் தாள் சிறியது. தாளைக் காட்டிலும் திருமேனிப் பரப்பு விரிவாக