பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 மனை விளக்கு

இருக்கும். இங்கே, மாநிலத்தையே சேவடியாகப் படைத்த பெருமானுக்கு எவ்லாவற்றையும் தன் அகத்தே அடக்கிய ஆகாயமே திருமேனியாக விளங்குகிறது. அந்த விசும்பு எல்லாப் பூதங்களையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு நிற்பது. விசும்பு தன் மெய்யாகக் கொண்டு இறைவன் எழுந்தருளியிருக்கிருன்.

தெய்வத் திருவுருவங்களுக்கு நான்கு கைகள் இருக்கும். எட்டுக் கைகளும் பதினறு கைகளும் அதற்கு மேற்பட்ட கைகளும் இருப்பதுண்டு. இரண்டு கைகளைப் படைத்த மக்களைக் காட்டிலும் பெருஞ்செயலும் ஈகைத்திறனும் படைத்தவன் இறைவன் என்பதைக் காட்டும் அடையாளங்கள் அ ைவ. மாநிலத்தைச் சேவடியாகவும், து நீர் வளை நரலும் பெளவத்தை உடுக்கையாகவும், விசும்பை மெய்யாகவும் படைத்த பிரான் எத்தனை கைகளை உடையவன்! திசைகள் எத்தனை? கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நான்கு என்று கூறலாம். இறைவனுக்கும் நான்கு திருக் கரங்கள்; அந்தத் திசைகளே கரங்கள். திக்குகள் நான்கு மட்டுமா? கோணத் திசைகளாகிய வடகிழக்கு, வட மேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்பவற்றையும் சேர்த்தால் எட்டாகிவிடுமே அஷ்டதிக்கு என்பது அடிப் பட்ட வழக்கமாயிற்றே! அப்படியானல் இறைவனுக்கும் கைகள் எட்டென்று தானே சொல்ல வேண்டும்? அதோடு நிறுத்திவிடக் கூடாது. மேலும் கீழுமாகிய திசைகளையும் சேர்த்துப் பத்துத் திக்கு என்று சொல்வதும் ஒரு வழக் கம். ஆழ் கடலில் ஒருவன் மூழ்குகிருன்; அவன் எந்தத் திக்கில் பிரயாணம் செய்கிருன்? கீழே, வான விமானத்தில் ஒருவன் ஏறுகிருன். அவன் எட்டுத் திக்குகளில் செல்ல வில்லை; மேலே செல்கிருன். ஆகவே, பத்துத் திசை என்று சொல்வது இந்தக் காலத்தில் நன்முக விளங்கும். திசை பத்து என்ருல் இறைவன் கைகளும் பத்துத்தான்.இன்னும் நுணுக்கமாகத் திசையாராய்ச்சியைச் செய்தால் வட