பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேத முதல்வன் 5

கிழக்குக்கும் கிழக்குக்கும் நடுவே பல பல கோணத் திசை கள் உண்டு. அலை அத்தனையுமே இறைவன் திருக்கரங் கள்தாம். இத்தனை கைகள் என்று கணக்கிட்டுச் சொல் வதில் சங்கடம் எழும். ஆனல் திசைகள் எத்தனையோ அத்தனை கைகள் என்று சொல்லிவிட்டால் ஒரு சங்கட மும் இல்லை. இறைவன் திசைகளைக் கையாகப் பெற்று விளங்குகிருன் .

சேவடியைக் கண்டோம்; உடுக்கையைத் தரிசித் தோம்; மெய்யை உணர்ந்தோம், கையையும் தெரிந்து கொண்டோம். நீண்டு உயர்ந்து விரிந்து படர்ந்து நிறைந்து விளங்கும் திருக்கோலத்தை ஒருவாறு நினைக்க முடிகிறது. என்ன உன்னதமான திருவுருவம் கம்பீரமான காட்சி! அளவு காண இயலாத திருக்கோலம்! மாநிலம் சேவடியாக, துரநீர் வளை நரல் பெளவம் உடுக் கையாக, விசும்பு மெய்யாக, திசை கையாக நிற்கும் பெருந் திரு மேனி அழகியது; விரிந்தது ; ஆதாரமானது.

எம்பெருமானுடைய திருவிழிகளைக் காண வேண் டாமா? இறைவன் திருவிழிகள் அவன் பிறரைப் பார்க்க மாத்திரம் அமைந்தவை அல்ல நாமும் அவன் திருவிழி களாலே தான் பார்க்கிருேம். நமக்கு முகத்தில் இரண்டு விழிகள் இருப்பது உண்மைதான். ஆனால் இந்த விழிகள் தாமே காணும் திறம் படைத்தவை அல்ல. இறைவன் தன் திருவிழிகளை விழித்து அருள் நோக்கம் பாலிக்காவிட்டால் நாம் கண் இருந்தும் குருடர்களாகவே கலங்கி நிற்போம். பகலில் செங்கதிரோன் உதய மாகாவிட்டால் உலகமே இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இருட்டறைக்குள்ளே விட்டு விட்டால் கண் இல்லாத குருடனுக்கும் கண்ணுள்ளவனுக் கும் வேறுபாடு இல்லை. கண் உடையவனுக்கு அந்தக் கண் பயன்படவேண்டுமானல் ஒளி வேண்டும்; அந்த ஒளியை இரவில் சந்திரனும் பகலில் சூரியனும் எப்போதும் அக் கினியும் தருகின்றன. அந்த மூன்றையும் முச்சுடர்கள்