பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேத முதல்வன் 9

உலகமே தன் உருவாக அமைய, எங்கும் பயின்று எவற்றையும் தன்னுள் அடக்கிய வேத முதல்வனைப்பற்றி நமக்கு என்ன தெரியும்? நாம் கோயிலில் விக்கிரகமாக வைத்து வழிபடுகிருேம். அந்த உருவந்தான் நமக்குத் தெரி யும். பலபல கோலங்களில் திருமால் கோலம் ஒன்று. சக்க ரம் தரித்ததிருக்கரத்தை உடையசக்கரபாணியாக அவனே வணங்குகிருேம். அந்தச் சக்கரம், தீதெல்லாம் அறும்படி யாக அவன் கரத்தில் விளங்குகிறது; உயிர்க் கூட்டங் களுக்கு நலிவு நேர்ந்தால் அதைப் போக்கிப் பாதுகாக் கும் படை அது; தீது அறும் பொருட்டு விளங்கும் திகிரி; அந்தத் திகிரியை உடையவனுக நாம் இறைவனைக் காண் கிருேம், சக்கரக்கையோன், தீதற விளங்கிய திகிரியோன் என்று புகழ்கிருேம்.

திகிரியைத் திருக் கரத்தில் கொண்ட திருமாலாக நாம் காணும் இப்பெருமானை அருள் பெற்ற சான்ருேர் கள் எப்படிச் சொல்கிரு.ர்கள் தெரியுமா? வேத முதல்வன் என்று சொல்லுகிரு.ர்கள். எங்கும் நிறைந்த பரம்பொருள், எல்லாவற்றையும் தனக்குள் அடக்கிய முதல்வன் என்று பாராட்டுகிரு.ர்கள். இதுமட்டுமா? அவனருளே கண்ணுகக் கண்டவர்கள் அப்பெரியார்கள்; அவனுடைய திருமேனிக் கோலத்தைக் கண்டு இன்புற்று அந்த இன்பப் பூரிப்பிலே நமக்கும் எடுத்துச் சொல்கிருர் கள். நாம் பார்க்கும் தீதற விளங்கிய திகிரியோனையே அவர்கள் மாநிலஞ் சேவடியாகப் பெற்றவன் என்றும், து நீர் வளை நரல் பெளவமே அவன் உடுக்கையாகும் என்றும், விசும்பு மெய்யாக விரிந்த திருமேனியன் அவன் என்றும், திசை கையாக நிற்பவன் என்றும், பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணுக அவனுக்கு ஒளிரும் என்றும் சொல்லி, அவன் விசுவ ரூபத்தைக் காட்டுகிரு.ர்கள். அதோடு, அவன் இயன்றவெல்லாம் பயின்றவனென்றும் புகழ்கிருர்கள்.