உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மனே விளக்கு

நிற்கும் இந்த நிலையைச் சர்வ வியாப்பியம் என்று சொல் வார்கள். பார்க்குமிடம் எங்கு மொரு நீக்கமற நிறைகின்ற பரம்பொருள் அவன். நமக்குத் தெரியாமல் எல்லாப் பொருள்களுக்குள்ளும் பயின்று நிற்கும் அப்பெருமான் அந்தப் பொருள்களை விடச் சிறியவன் அல்ல. அடங்கின பொருளைக் காட்டிலும் அடக்கி வைத்திருக்கும் பொருள் பெரிது என்பது இயல்பு. இங்கே இயன்ற எல்லாப் பொருள்களிலும் இறைவன் அடங்கி நிற்கிருன் என்ரு ல், அந்தப் பொருள்கள் அவனே விடப் பெரியவை என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா? ஒரு குடத்தைக் குளத் துக்குள் போடுகிருேம். அந்தக் குடம் முழுவதும் நீர் நிரம்பி இருக்கிறது. குடத்துக்குள்ளே நீர் இருக்கிறது. ஆனல் நீர் குடத்துக்குள் இருப்பதோடு நிற்கவில்லை. அது குடத்துக்கு உள்ளே அடங்கியிருக்கிறது; ஆயினும் அந்தக் குடம் நீருக்குள் இருப்பதனால், அந்த நீர் குடத்தைத் தனக்குள்ளே அடக்கியும் இருக்கிறது குடத்துக்கு உள் ளும் புறம்பும் நீர் இருப்பதல்ை குடத்துக்குள் அடங்கியும் குடத்தைத் தனக்குள் அடக்கியும் நிற்கிறது நீர் என்று சொல்லுவதில் தவறு இல்லை. இறைவனும் அப்படித்தான் இருக்கிருன். இயன்ற எல்லாவற்றிலும் பயின்று நிறைந் திருக்கிருன்; அதே சமயத்தில் எல்லாவற்றையும் தன் அகத்தே அடக்கியும் வைத்திருக்கிருன். உள்ளும் புறம்பும் நிறைந்து விளங்குகிருன். அவன் சர்வாந்தரியாமி, சர்வ வியாபகன். எதற்குள்ளும் அடங்கியவன்; எதிலும் அடங் காதவன். எல்லாவற்றுள்ளும் இருக்கிருன்; எல்லாவற்றிற் கும் அப்பாலாய் இருக்கிருன்; கடவுள்.

இப்படி, இயன்ற எல்லாவற்றினேடும் பயின்றும், எல்லாவற்றையும் அகத்து அடக்கியும் விளங்கும் இறை வனே வேதத்தைத் திருவாய் மலர்ந்தருளினன். வேதத்தை அவன் சொன்னன்; அந்த வேதம் அவனைத்தான் சொல் கிறது. ஆகவே வேதத்தைத் தந்த முதல்வனும் அவனே, வேதத்திற்குப் பொருளாகிய முதல்வனும் அவன்தான்.