பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேத முதல்வன் 7.

திருவடி ஒன்றுதானே தெரியும்? அதைக் கண்டால், அன்பு டன் கண்டால், பிறகு மற்ற அங்கங்களைப் பார்க்க இய லும். கடவுளைத் துதி செய்கையில் திருவடி தொடங்கித் திருமுடி வரையில் வருணிப்பது மரபு. இதைப் பாதாதி கேசம் என்று சொல்லுவார்கள். இங்கே இறைவனுடைய திருமேனியைச் சேவடி தொடங்கிக் கண்டோம் அந்தச் சேவடி, மாநிலம். நாம் நிற்கும் நிலத்தை முதலில் பார்த் துத்தானே கடலையும் விசும்பையும் திசையையும் சுடரை யும் பார்க்க வேண்டும்? மாநிலப் பரப்பைக் கண்டோம்; அதில் இறைவன் சேவடியைக் கண்டோம்; கண்டோமோ இல்லையோ காணவேண்டும். தூநீர் வளை நரல் பெளவத் தைக் கண்டோம்; அதில் இறைவன் உடுக்கையைக் கன் டோம். விசும்பைப் பார்த்தோம்; திசையைக் கண்டோம்; அவன் மெய்யையும் கையையும் கண்டோம். பசுங்கதிர் மதியத்தையும் சுடரையும் பார்த்தோம்; அவற்றில் அவன் கண்களைக் கண்டோம். மாநிலத்தைச் சேவடியாகப் பார்க் கும்போது மாநிலம் என்ற நினைவு மறந்து இறைவன் நினைவு ஊன்றுகிறது. பெளவத்தை அவன் உடுக்கை யாகப் பார்க்கும் கண்ணுடையாருக்குக் கடல் மறை கிறது; அவன் நீலப்பேராடையே தோன்றுகிறது.விசும்பை மறந்து மெய்யைப் பார்க்கவும், திசையை மறந்து கை யைப் பார்க்கவும், சுடரை மறந்து கண்ணேப் பார்க்கவும் வன்மையுடையவர்கள் எங்கும் இறைவனைப் பார்க்கும் பேரறிவாளர்கள்.

நாம் அப்படிப் பார்ப்பதில்லை. நாம் பார்க்க முடிய வில்லை என்பதல்ை உண்மை மாருதே! +.

இறைவன் எங்கும் நிறைந்து பயின்று நிற்கிருன். இயற்கை முழுவதும் அவன் திருவுருவம் பல பல உருவங் களாக இயலும் எல்லாவற்றிலும் அவன் உறைகிருன்; அவற்றினூடே நிறைந்து பயின்று நிற்கிருன், அவற்றுக் குள்ளே அடங்கி நிற்கிருன். இயன்ற எல்லாவற்றிலும் பயின்று