பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ம&ன விளக்கு

மணமும்போல ஒருவரோடு ஒருவர் உள்ளம் ஒன்றி இசைந்து இன்ப வாழ்வு காண்கிறவர்கள். இப்போது அவன் அவளை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டியிருக்கும். பொருள் ஈட்டச் செல்லும் இடத்திற்கு அவளேயும் அழைத்துச் செல்வது இயலாத காரியம். பிரிந்துதான் போக வேண்டும். போகாமல் இருந்து விடலாமென்ருல், பொருள் இல்லாமல் இல்லற வாழ்க்கையில் ஒன்றும் செய்ய இயலாதே!

பிரிந்து செல்லத்தான் வேண்டும். எவ்வளவு விரை விலே பொருளைச் சம்பாதித்துக் கொண்டு வரலாமோ அவ்வளவு விரைவிலே வந்துவிட வேண்டும் என்று தான் அவன் நினைத்தான். இன்றியமையாத அளவுக்குப் பொருள் ஈட்டினல் போதுமே கோடி கோடியாகக் குவித்து விட வேண்டும் என்ற ஆசை அவனுக்கு இல்லை. ஆதலின் சிறிது காலமே அவளைப் பிரிந்திருக்க நேரும்.

ஆனலும் அந்தச் சிறிது காலங்கூட அவர்கள் பிரிந் திருக்க முடியாதே! அவன் ஆடவன்; மனத்திண்மை படைத்தவன். பொருளிட்டும் முயற்சியில் ஈடுபடுவதனுல் பிரிவுத் துன்பத்தை அவன் ஒரளவு மறந்திருக்கலாம். அவனுடைய காதலி பிரிவைச் சகிப்பாளா? ஒவ்வொரு கணமும் அவனைக் காணுமையாலே புழுவைப் போலத் துடிக்க மாட்ட்ாளா?

பொருளோ இன்றியமையாதது; அதை சம்பா திக்கக் காதலியைப் பிரிந்துதான் செல்ல வேண்டும். பிரிவுத் துன்பமோ பொறுத்தற்கு அரியது. இந்த இசை கேடான நிலைமையில் என்ன செய்வது?

எப்படியோ ஒருவாறு அவளுக்குத் தன் காதல் புலப் படும்படி கொஞ்சின்ை; ஆறுதல் கூறினன்; தான் போக வேண்டியதன் அவசியத்தை உணர்த்தின்ை; புறப்பட்டு