பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன விளக்கு 13

விட் டான். போய்ப் பொருள் தேடினன். சம்பாதித்தான்; மறுபடியும் ஊர் வந்து சேர்ந்தான். அவளோடு இப்போது சேர்ந்து அநுபவிக்கும் இன்பம் முன்னேக் காட்டிலும் மிகுதியாக இருக்கிறது. நினைத்த காரியத்தை நினைத்த வண்ணம் நிறைவேற்றி வெற்றி கண்டு விட்டால், எத்தனை ஆனந்தம் இருக்கும் அவ்வளவு ஆனந்தம் அவளால் உண்டாகிறது. மேற்கொண்ட செயலைவினையை-முடித்தாற்போன்ற இனிமையைத் தருபவள் அவள்; செய்வினை முடித்தன்ன இனியோள். செய் வினையை முடித்துப் பயன் பெற்றவன் அல்லவா அவன்? ஆகவே அந்த இன்பத்தையும் இந்த இன்பத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் இயல்பு அவனிடம் அமைந்தது.

இப்போது அவனுடைய உள்ளத்தில் சிறிது சபலம் தட்டியது; மறுபடியும் வெளிநாடு சென்று சில காலம் தங்கி ஏதேனும் தொழில் செய்து பணம் சம்பாதித்து வரலாமா என்ற எண்ணம் தோன்றியது. பணம் எவ்வளவு இருந்தால்தான் என்ன? செலவழிக்கவா வழி இல்லை? இன்னும் பணம் சேர்த்து வந்தால், இன்னும் இன்பம் உண்டாவதற்கு ஏற்ற வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாமே என்ற விருப்பம் அவனுடைய நெஞ் சிடையே முளைத்தது.

'அட பாவி நெஞ்சே உனக்கு இன்னுமா சபலம்? முன்னலே பட்ட துன்பங்களையெல்லாம் அதற்குள் நீ மறந்து போனயா? பொருளைச் சம்பாதிக்க மறுபடியும் போகலாம் என்று எண்ணுகிருயே! போன தடவை படாத பாடு பட்டோம்; அதை எண்ணிப் பார்: என்று அவன் நினைக்கிருன்; நெஞ்சு தான் நினைக்கிறது; ஆளுலும் அதை வேருக வைத்துப் பேசுவதுபோல் அந்த நினைப்பு ஒடுகிறது.