பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மனே விளக்கு

"நாம் போனேமே, அந்த வழி அழகிய சாலையும் சோலையுமாகவா இருந்தது? பூங்காவும் அடர்ந்த மரமும் நிழல் தர, போகும் இடங்களில் எல்லாம் மக்கள் உபசாரம் செய்ய, அழகிய காட்சிகளைக் கண்டு களித்துச் சென்ரு லும் குற்றம் இல்லை. அந்தக் கண்ண ராவிக் காட்சியை என்னவென்று சொல்வது!"

அவன் இப்போது இருந்த இன்பச் சூழலிலே அன்று அப்போது பட்ட பாட்டை நினைவுக்குக் கொண்டு வருகிருன் , 3. ,

போன வழியெல்லாம் மரம் கருகி வளம் சுருங்கிய பாலே நிலம் அது. எங்கேயோ ஒரு மூலையில் வேப்ப மரம் ஒன்று; வேறு எங்கோ ஓரிடத்தில் நெல்வி மரம் ஒன்று. பார்த்தாலே கண் எரிச்சலை உண்டாக்கும் அந்தச் சுரத்தில் நிற்கும் அந்த வேப்ப மர மாவது தழை அடர்ந்து வளர்ந்திருக்கிறதா? என்றைக்கோ தண்ணி ரைக் கண்ட அது ஏதோ புண்ணியத்துக்கு உயிரை வைத்துக் கொண்டிருக்கிறது. இலையே தெரியாமல் கிளை தெரிவதனால் அது நீளமாகத் தோற்றுகிறது. வளம் இல்லாமல் சதைப் பிடிப்பின்றிக் குச்சி குச்சியாக இருக்கும் கையும் காலும் உடம்பும் நீளமாகத் தோற்று வது இல்லையா? வானத்திலே அந்தக் கிளைகள் நிமிர்ந்து நின்றன. பரந்து படர்ந்து தழைத்து நிழல் கா அங்கே நீர் வளந்தான் இல்லையே மேலெல்லாம் ஆகாசம். அதை முட்டுவதுபோல நிற்கிற வான் பொரு நெடுஞ்சினை களையுடையது அந்த வேப்ப மரம்.

அதன் அடிமரம் எப்படி இருக்கிறது? பொறுக்குத் தட்டின் புண் ணப்போலே பொரிந்துபோய்க் கிடக்கிறது. பொரிந்த அரையையுடைய அந்த மரத்தின் வான்பொரு நெடுஞ்சினையின் மேல் ஒரு மலை இருக்கிறது. அது குயிலும் அல்ல: ஒளியும் அல்ல. குயிலுக்கும் கிளிக்கும்