பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனே விளக்கு i5

அங்கே பழமும் தளிரும் ஏது? பருந்தும் கழுகுமே அந்தப் பாலைவனத்தின் பறவைகள் வழிப்பறி செய்யும் கள்வர் கள் பிரயாணிகளை மடக்கிக் கொலை செய்வதும் உண்டு. அந்தப் பிணங்களைக் கொத்தி விருந்துண்ணும் பெருமை உடைய பறவைகளே அந்த நிலத்தில் வாழ முடியும். பருந்தும் கழுகும் பிணந்தின்னும் சாதி அல்லவா?

பாலை நிலத்துப் பிரஜையாகிய பருந்து ஒன்று வேப்ப மரத்தின்மேல் இருக்கிறது. அதற்கு அங்கே என்ன வேலை? அது முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்க வந்திருக் கிறது. பிரசவ வேதனையோடு அந்த மரத்துக் கிளையில் தங்கியிருக்கிறது. அந்த வேம்யின் மேலே, ஈனும் பருந்து வருந்தி உறையும் காட்சியைத்தான் காணலாம். பிணந் தின்னும் பரம்பரை வளர இடம் கொடுக்கிறது, அந்த வேப்ப மரம்! -

வேப்ப மரத்தின் கீழே என்ன இருக்கிறது? அடர்ந்து செறிந்திருந்தால் நல்ல நிழல் இருக்கும். இந்த மரத்திலோ பேருக்கு இலைகள் இருக்கின்றனவே ஒழிய, அவை தளதள வென்று தழைத்திருக்கவில்லை; அந்த இலைகளும் உருவம் சுருங்கிய சிறிய சிறிய இலைகள். மரத்தின் கீழே நிழல் படர்ந்தா இருக்கும்? புள்ளி புள்ளியாக நிழல் இருக்கிறது, பொரிந்த அரையும் வானேப் பொரும் நெடுஞ்சினையும் ஈனும் பருந்த உயவும் (வருந்தும்) நிலையும் உடைய அந்தப் பாலை நில வேப்ப மரத்தின் கீழே புள்ளி நிழல் தான் இருக்கிறது. -

அட! அந்த நிழலுக்குக்கூட வெறித்துப் போனவர் கள் அங்கே இருக்கிருர்களே! எங்கே பார்த்தாலும் படை பதைக்கும் வெயில் காயும் போது அது புள்ளி நீழலாக இருந்தால் என்ன? நிழல் என்பதே அரிய பொருளாக இருக்கும் அந்தப் பிரதேசத்தில் எவ்வளவு குறைவாக இருந்தாலும் நிழல் நிழல்தானே? -