பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனை விளக்கு 19

படித் துன்பம் அடைவதைவிடப் பேசாமல் ஊருக்கே திரும்பிம் போய்விடலாா என்றுகூட அவன் நினைத்தான். *சி சி! முன்வைத்த காலைப் பின் வைக்கவாவது! உலகம் ஏ சாதா? ஊராங் ரசமாட்டார்களா? காதலியே ஏளன மாகப் பார்த்துச் சிரிக்கமாட்டாளா? இத்தனை தூரம் வந்துவிட்டோம். எப்படியாவது நினைத்த காரியத்தை முடித்துக் கொண்டு பணமும் கையுமாகத்தான் ஊருக்குப் போகவேண்டும்’ என்று தீர்மானித்தான். ஆயினும் அவன் மனைவிளக்காகிய காதலி ையில் விளக்குக்கு முன்னே நினைப்பில் ஆழ்ந்திருக்கும் கோலத்தை எளிதில் அவன் உள்ளத்திலிருந்து அகற்ற முடியவில்லை, மனம் சுழன்றது; கலங்கியது; மயங்கியது; திரும்பிப் போகலாம் என்று சிதறியது.

கடைசியில் ஆண்மை வென்றது. உறுதியுடன் பாலை நிலத்தைக் கடந்துசென்ருன். வேற்று நாட்டுக்குப்போய்ப் பொருள் ஈட்டி வந்தான். நினைத்த காரியத்தை நினைத்த படி முடித்து வந்தான். அதற்குரிய மனத் திண்மை அவனுக்கு இருந்தது. "எண்ணிய எண்ணியாங்கு எய்துய எண்ணியார், திண்ணியர் ஆகப் பெறின்' என்பது எத் தனை உண்மை! அப்படி நிறைவேற்றினதால் வந்த இன் பந் தான் என்ன! அந்த மன நிறைவுக்கு ஒப்பு உண்டா? உண்டு. இப்போது அவனுடைய காதலி நினைத்த வினே யை முடித்தால் வரும் இனிமையின் பிழம்புபோல இருக்கிருள். அவளே மீட்டும் பிரிந்து செல்வதா?

பழங்கதை அவனுடைய உள்ளத்தே ஓடியது. நெஞ்சே, அன்று நான் பாலை நிலத்தில் நடு வழியில் என் உரனெல்லாம் மாயும் படி வந்த மாலைக்காலத்தில் வினை முடித்தாலன்ன இனியோளாகிய காதலி மனேக்கு மாட் மை தரும் சுடரொடு நின்று படரும்பொழுது இது