பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மனே விளக்கு

என்று நினைத்து மயங்கினேனே மறுபடியும் அந்த அவஸ் தைக்கு ஆளாக வேண்டுமா? பட்ட பின்பும் துன்பத்தை வலிய மேற்கொள்வார் உண்டோ? நான் போக மாட் டேன்' என்று தன் நெஞ்சோடு அந்தத் தலைவன் பேசு கிருன்.

ஈன்பருந்து உயவும் வான்பொரு நெடுஞ்சினைப் பொரிஅரை வேம்பின் புள்ளி நீழல் கட்டளை அன்ன வட்டரங்கு இழைத்துக் கல்லாச் சிருஅர் நெல்லிவட்டு ஆடும் வில்லேர் உழவர் வெம்முனைச் சீறுர்ச் சுரன்முதல் வந்த உரன்மாய் மாலை, உள்ளினென் அல்லளுே யானே, உள்ளிய வினைமுடித் தன்ன இனியோள் மனமாண் சுடரொடு படர்பொழுது எனவே?

  • நெஞ்சே, முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பருந்து இருந்து வருந்தும், வானே முட்டும் நீண்ட கிளை களையும் பொரிந்த அடியையும் உடைய வேப்ப மரத்தின், புள்ளி வைத்தாற்போன்ற செறிவில்லாத நிழலிலே, பொன்னே உரைக்கும் கல்லேப் போன்ற வட்டாடுதற் குரிய இடத்தை அமைத்து, கல்லாத சிறுவர்கள் நெல்லிக் காயாகிய வட்டுகளே வைத்துக் கொண்டு விளையாடுவதும், வழிப் போவோரைக் கொலை செய்யும் வில்லையே ஏராகக் கொண்டு முயற்சி செய்யும் ஆறலை கள்வர் வாழ்கின்ற வெம்மையையுடைய முன்னிடங்களைப் பெற்ற சிறிய ஊர்களை உடையதுமாகிய பாலைநில வழியில் வந்த என் மன வலிமையை அழியச் செய்கின்ற மாலைக் காலத்தில் நான் நினைத்துக் கவலையுற்றேன் அல்லவா, நினைத்த

காரியத்தை நிறைவேற்றில்ை வரும் இனிமையைப் போன்ற இனிமையையுடைய நம் காதலி, நம் மனைக்கு

அழகான விளக்கோடு நின்று கவலையோடு நம்மை நினைக் கும்பொழுது இது என்று?*