பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனை விளக்கு 21

மாலையில், எனவே, யான் உள்ளினென் அல்லனே என்று வாக்கியத்தை முடித்துக் கொள்க.

ஈனுதல்-கருவுயிர்த்தல். உயவும்-வருந்தும். சினைகிளை. பொரி அரை-பொரிந்த அடி மரம்; பொறுக்குத் தட்டிப்போன அடிமரம். புள்ளி நீழல்-ஒரே பரப்பாகச் செறிந்து கிடக்காமல் புள்ளி புள்ளியாக இருக்கும் நிழல். கட்டளை-பொன்னை உரைக்கும் கல். வட்டு அரங்குசூது காய்களை ஆடும் இடம்; குண்டுகளை ஆடும் இடம். வில் ஏர் உழவர்-வில்லையே ஏராக உடைய உழவராகிய பாலை நில மறவர். முனை-முன்னிடம். சீறுார்-சிறு ஊர். கரன்முதல்-பாலை நில வழியிடத்தில்; முதல் : ஏழாம் வேற்றுமை உருபு. உரன்-வலிமை; இங்கே மனத்திண்மை. உள்ளினென்-நினைத்தேன். வினைமுடித்தன்ன-காரியத்தை நிறைவேற்றின ற் போன்ற. மனைமாண்-மனைக்கு மாட்சி தருகின்ற, சுடர்-விளக்கு. படர்-நினைக்கும். *

"முன் ஒரு காலத்துப் பொருள் வயிற் பிரிந்த தலைமகன், பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது' என்பது இந்தப் பாடலின் துறை. முன்பு ஒரு தடவை பொருள் ஈட்டுவதற்காகத் தன் காதலியைப் பிரிந்து சென்று மீண்ட தலைமகன், மறுபடியும் பொருள் தேட வேண்டுமென்று எண்ணிய நெஞ்சுக்குச் சொன்னது" என் பது அதற்குப் பொருள். மணம் செய்துகொண்டு இல்ல றம் நடத்தும் கற்புக் காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி இது.

இதனைப் பாடியவர் இளங்கீரனுர் என்னும் புலவர். இது நற்றிணையில் முன்ருவது பாட்டு.