பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

தமிழ் மொழியைப் பலவகையிலே சிறப்பிற்துச் சொல்வதுண்டு. செந்தமிழ், பசுந்தமிழ், தீந்தமிழ், நற்றமிழ் என்று பாராட்டுவர்ர்கள். இப்படி மற்ற மொழி களையும் அவற்றைப் பேசுவோர் பாராட்டிச் ச்ொல்வதும் இயல்புதான். ஆனல் தமிழின் சிறப்பை வேறு ஒருவித மாகச் சொல்வதுண்டு. அந்தச் சிறப்பு வேறு மொழி களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. 'சங்கமலி செந்தமிழ் 'சங்கத்தமிழ்' என்று சிறப்பித்துப்பாராட்டும் தமிழ், சங்கங்களிலே சிறப்பாக வளர்ச்சி பெற்றது. மக்கள் பேசுவதனால் தமிழ் விரிந்து பரந்தது. ஆனல் அதளுேடு நின்றிருந்தால் இலக்கிய்ச் செல்வம் வள்ர்ச்சி பெற்றிராது, புலவர்கள் பல நூல்களே, இயற்றுவதல்ை தான் அந்தச் செல்வம் ஒரு மொழியில் மிகுதியாகும்.

தமிழில் பல புலவர்கள் பல பல நூல்களே இயற்றி ஞர்கள். அந்த நூல்கள் யாவுமே தமிழ் நாட்ாரின் பாராட்டைப் பெறவில்லை. இயற்றப்பெற்ற நூல்கள் எல்லாமே நின்று நிலவும் பெருமையைப் பெற முடியுமா? தமிழ்ச் சங்கம் என்ற புலவர் கூட்டம் ஒன்று இருந்தது. அதில் பல சிறந்த புலவர்கள் இருந்தார்கள். அழகிய கவிகளைப் பாடினர்கள். நாடு முழுவதும் வேறு பல புலவர்கள் இருந்தனர். அவர்களும் பல கவிகளை இயற்றினர். ஆயினும் அப் புலவர்கள் தங்கள் கவிகளைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றிய தல்ைதான் தமிழ் நாட்டாரின் நன்மதிப்பைப்பெற் முடிந்தது. இவ்வாறு தமிழ் நூல்கள் தக்கவர்களுடைய பார்வைபெற்றுத் தமிழ் நாட்டில் உலவி வந்தன. அதனால்தான் சங்கத் தமிழ்

என்ற பெருமை தமிழுக்கு வந்தது.

தமிழ்ச் சங்கத்தை வளர்த்தவர் பாண்டிய மன்னர், பாண்டி நாடு தமிழ் நாட்டின் நடுநாயகமாக் இருந்தது. செந்தமிழ் நாடு, தமிழ் நாடு என்ற பெயர்கிள் இந்த