பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

íi மனே விளக்கு

நாட்டுக்குப் பழங்காலத்தில் வழங்கி வந்தன. பாண்டி நாட்டில் மக்கள் பேசும் தமிழ்தான் நல்ல தமிழ் என்றுகூட அக்காலத்தில் நினைத்தார்கள் அதன் தலே நகரத்தில் தமிழ்ச் சங்கம் இருந்து வந்த : அங்கே இருந்தாலும் மற்ற நாடுகளிலிருந்து புலவர்கள் வந்தார்கள் முடிய ணிந்த மன்னராகிய சேர சோழ பாண்டியர் என்ற மூவரும் தமிழ் நாட்டை ஆண்டு வந்:னர். இவர்களுக் குள்ளே எப்பொழுதாவது பகைமை இருந்தாலும், பிறநாட்டிலுள்ள புலவர்கள் பாண்டிநாட்டுக்கு வரு வதற்கு ஒரு தடையும் இருந்ததில்லை. சங்கத்தில் இருந்த புலவர்கள் அத்தனை பேரும் பாண்டி நாட்டார் என்று சொல்ல முடியாது. பல நாடுகளில் பல ஊர்களில் பிறந்து வாழ்ந்த புலவர்கள் சங்கத்தில் இருந்து தமிழை வளர்த் தார்கள்.

பழைய தமிழ்ச் சங்கங்கள் மூன்று இருந்தன என்று சொல்வார்கள். ஒரே காலத்தில் அவை இருக்கவில்லை. வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்தன. தொடர்ந்து பல ஆண்டுகள் நடந்து வந்த சங்கம், கடல் கோளிளுல் பாண்டியனுடைய தலைநகரம் மாறியபோது, வேறு இடத்திற்கு மாறவேண்டிய அவசியம் நேர்ந்தது.

இன்றுள்ள கன்னியாகுமரிக்குத் தெற்கிலும் தமிழ் நாட்டுப் பகுதி இருந்தது. குமரிமலை, குமரியாறு, பஃறுள் யாறு என்பவை அந்த நிலப் பரப்பிலே இருந்தன. மதுரை என்ற நகரம் ஒன்று இருந்தது. அதுவே அக்காலத்துப் பாண்டி நாட்டின் தலைநகரம். பாண்டியர்களே தமிழ்ச் சங்கத்தை வளர்த்தமையால் அவர்களுக்குரிய தலைநகரமே தமிழ்த் தாய்க்கும் தலைநகரமாக விளங்கியது. அந்தப் பழைய மதுரையையும் பாண்டிநாட்டைச் சார்ந்த ஒரு பகுதியையும் கடல்பொங்கி அழித்துவிட்டது. அதஞ்ல் அந்த நாட்டின் நிலை மாறியது. பாண்டிய மன்னன் வடக்கே உள்ள கபாடபுரம் என்ற நகரத்தைத் தன் தலை நகரம் ஆக்கிக்கொண்டான். அந்த நகரத்தைப் பற்றிய செய்தி வால்மீகி ராமாயணத்தில் வருகிறது. பாண்டிய மன்னன் அங்கே தமிழ்ச் சங்கத்தையும் நிறுவினன்.

- மீண்டும் மற்ருெரு கடல்கோள் வந்தது. கபாடபுரம் இருந்த பாண்டி நாட்டின் தென்பகுதிய்ைக் கடல் விழுங்கி