பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபடு தெய்வம் 23

போகின்ற வழி வளப்பமான இடம் அல்ல. பாலை நிலத்து வழியேதான் போக வேண்டும். அதில் நடப்ப தற்கு அவள் ஒருகால் அஞ்சுவாளோ என்ற ஐயம் உண் டாயிற்று. இன்னும் கடுமையான பாலை நிலத்தின் இடைப் பகுதிக்கு வரவில்லை, அங்கே ஒரு புன்கமரம், அதன் நிழலிலே அவளுடன் அமர்ந்தான். ஆர அமர அவள் திருவுருவ எழிலைப் பார்த்தான். -

"என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்?' என்று புன்னகை பூத்தபடியே அவள் கேட்டாள். அவளுடைய வெள்ளே வெளேரென்ற பற்கள் முத்துக் கோத்தாற்போல அழகாக இருத்தன. வால் எயிறு உடையவள் அந்த மடமங்கை.

'உன்னைச் சந்தித்துப் பேச வேண்டுமென்று இரவு நேரங்களில் நான் ஒருவரும் அறியாமல் வந்தேனே! அப் போது உன்னைக் காண்பது எவ்வளவு அரிதாக இருந்தது! எவ்வளவு மனம் கலங்கினேன்! இனிமேல் நீயும் நானும் பிரியாமல் யாருடைய கட்டுக் காவலும் இல்லாமல் பழகலாம்.'

"அப்போதெல்லாம் நான் மாத்திரம் கலங்க வில்&லயா?”

"நீயும் கலங்கிய்ை. ஆனாலும் நான்தான் முயற்சி செய்தேன். இருவரும் அளவளாவி இன்புற்ருலும் உன் னைத் தேடிக் கொண்டு இரவில் காடு கடந்தும் ஆறு கடற் தும் ஓடி வந்தேனே! எனக்கல்லவா உன் அருமை தெரியும்?”

“நான் உங்களைத் தெய்வமாக மதித்து உங்களையே எண்ணி நாள் முழுவதும் அலமந்தேனே! அதனை நீங்கள் அறிவீர்களா?"