பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மனே விளக்கு

'எனக்கு நீ தான் இஷ்ட தெய்வம்; உபாஸ்கு மூர்த்தி, வழிபடு கடவுள். நெஞ்சிலே முறுகிய அன்புடைய பக்தர் கள், ஆர்வத்தையுடைய மக்கள், தங்கள் இஷ்ட தெய் வங்களே வழிபடுகிரு.ர்கள். எத்தனை துன்பம் அடைந்தா லும் அவற்ருல் சோர்வு அடையாமல், அழிவிலராகி மேலும் மேலும் தங்கள் வழிபாட்டிலே ஈடுபட்டு நிற்கிருர் கள். தங்கள் ஆண்டவனுடைய திவ்யதரிசனம் காண வேண்டுமென்று அலமந்து வேசாறி நிற்கிரு.ர்கள். விரதம் இருந்தும் தவம் செய்தும் தானம் செய்தும் மந்திரங்க்ளே உச்சரித்தும் போற்றுகிரு.ர்கள். அவர்களுக்கு அந்தக் கடவுள் நேரில் எழுந்தருளித் தன் திருக்கோலத்தைக் காட்டியருளினால் எத்தனே ஆனந்தத்தை அடைவார்கள்'

"வழிபடு தெய்வத்தைக் கண்ணிலே கண்டவர்கள் உண்டோ?’’ -

'இல்லையென்று எவ்வாறு சொல்ல முடியும்? எவ்வள வோ அன்பர்கள் உலகில் இருக்கிரு.ர்கள். கடவுள் அருளைப் பெற அவர்கள் ஆர்வத்தோடு முயலும் திறத்தை நாம் அறிய முடிவதில்லை. அவர்கள் அன்பு அற்புதமான ஆற் றலையுடையது. அந்த ஆர்வ மாக்கள் வழிபடு தெய்வத்தை இந்த ஊனக் கண்ணுலே கண்டுவிட்டால் பெறும் ஆனந் தம் இத்தகையதென்று எனக்குத் தெரியும்.”

"எப்படித் தெரியும்? உங்கள் வழிபடு தெய்வம் எது?”

"அந்தத் தெய்வத்தை இடையீடில்லாமல் தரிசிக்க வேண்டுமென்று நான் முயன்றேன். தெய்வம் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம்கொடுக்க மாட்டேன் என் முன். கடைசியில் தெய்வம் நேரிலே வந்து காட்சி அளித்து வரம் கொடுத்துவிட்டது.”

"உங்கள் பேச்சு விளங்கவில்லையே!”