பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபடு தெய்வம் 25

'நான் வழிபடும் தெய்வம் இன்னதென்று இன்னுமா தெரியவில்லை? முன்பே சொன்னேனே! தன் முகம் தனக் குத் தெரியுமா?’’

காதலிக்குக் காதலனுடைய உள்ளக் குறிப்புத் தெரிந்துவிட்டது. நாணத்தால் தலை கவிழ்ந்தாள். தல்ை வன் அவள் தோளைத் தன் கையால் மெல்லத் தழுவினன்.

"இந்த அழகிய பருத்த தோளை அடைய நான் எத் தனை முயற்சிகள் செய்தேன்! இப்பொழுதல்லவா எளிதிலே இந்தப் பாக்கியம் கிடைத்தது? அழிவு இலராகி ஆர்வ முடைய மாக்கள் தம் வழிபடு தெய்வத்தைத் தம் கண்ணுலே தரிசித்ததுபோல உன்னே, அடைந்தேன். உன் அழகிய மெல்லிய பருத்த தோளை அணைந்தேன். இதுவரைக்கும் நான் எப்படியெல்லாம் திரிந்தேன்! காடென்றும் மலை யென்றும் பாராமல், மழையென்றும் இருளென்றும் நில் லாமல், ஆறென்றும் விலங்கென்றும் அஞ்சாமல் வந் தேன். ஆனலும் மனம் சுழன்றது; கலங்கியது; ஒவ்வொரு நாளும் உன்னைப் பார்க்க முடியுமோ, முடியாதோ என்று கலங்கியது. இத்தகைய வருத்தத்துக்கு இனிமேல் இடம் இல்லை. நம் மனம்போல முழு உரிமையுடன் பழகலாம்.'

"நாம் போகும் இடங்களில் இப்படி மரங்கள் நிறைய இருக்குமோ?’’ -

'அங்கங்கே இருக்கும். இதோ இந்தப் புன்க மரத்தின் தளிரைப் பார். எவ்வளவு அழகாகவும் பளபளப்பாகவும் இருக்கிறது! இந்தத் தளிரைப் பறித்து உன் மார்பிலே அப்பிக் கொள். பொன்னிறப் பிதிர்வுடைய உன் அழகிய நகில்களிலே இந்தத் தளிரை அப்பு. அங்கே தெய்வம் வீற்றிருக்கிறது. அத் தளிர்களை அருச்சிப்பதுபோலத் திமிர்ந்துகொள்.'

"வழியிலும் பல மரங்கள் இருக்குமோ?”