பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ம&ன விளக்கு

"இருக்கும். எங்கெங்கே நிழலைக் காண்கிருேமோ அங்கங்கே தங்கலாம்; நெடுநேரம் தங்கி அளவளாவலாம். மணல் இருந்தால் அங்கே நீ விளையாடலாம். அப்படியே வருத்தம் இல்லாமல் நாம் வழி நடக்கலாம்.'

"வருத்தம் ஏன்?" என்று கேட்டாள் காதலி.

'வாலெயிற்ருேய், உன் தாய் தந்தையரையும் தோழி மார்களையும் பிரிந்து வந்ததனால் ஒரு கால் உனக்கு வருத் தம் உண்டாகலாம். தளிரால் அலங்கரித்துக் கொண்டு, நிழலைக் காணுந்தோறும் இளைப்புாறிச் செல்வோம். விளை யாடவும் இடம் உண்டு. மணல் நிரம்பிய இடங்கள் இருக்கின்றன. அங்கே நீ கோடு கிழித்துக் கோலம் போட்டு வீடுகட்டிச் சிறு சோறு சமைத்து விளையாடலாம் வழியெல்லாம் உனக்கு மகிழ்ச்சி உண்டாகத் தக்கபடி

மரமும் மணலும் இருக்கின்றன. தளர்ச்சியில்லாமல் போகலாம்.'

"வழியிலே என்ன என்ன மரங்கள் உண்டு?’’

'காடு காடாக மரங்கள் சில இடங்களில் உண்டு. சில இடங்களில் மாஞ்சோலைகள் இருக்கின்றன. கம்மென்று மாம்பூ வாசனை வீசும். உள்ளே புகுந்தால் தண்ணென்று குளிர்ச்சியாக இருக்கும். மாமரம் நிரம்பிய நறுந்தண் பொழில் அவை. மாம்பூவின் அரும்பைக் சோதி இன் புறும் குயில்கள் இனிமையாகக் குரல் எடுத்தக் கூவும். கண்ணுக்கு அழகான காட்சி, மாமரமும் மாம்பூவும். உடம்புக்கு இனிதான நிழல்; தண்ணிய பொழில். நாசிக் கினிய நறுமணம். காதுக்கு இனிய குயிலின் இசை, இத்தனை இனிமையும் உள்ள இடங்களின்வழியே நீ நடந்து செல்லப் போகிருய்.”

"நான் மட்டுமா? நீங்கள்?