உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபடு தெய்வம் 27

‘'நீ என்ரு சொன்னேன்? தவறு. நாம் செல்லும் வழி யிலுள்ள கானங்கள் இத்தகைய நறுந் தண் பொழில்களை உடையன.’’ c

'மனிதர்கள் வாழும் இடம் ஒன்றும் இல்லையா?”

'அடடா அதைச் சொல்ல மறந்து போனேனே! எத்தனையோ ஊர்கள் இருக்கின்றன. சின்னச் சின்ன ஊர்களாகப் பல உண்டு. எல்லாம் நாம் போகும் வழி யிடையே நீதான் காணப் போகிருயே!’’-அவன் நாம்' என்பதை அழுத்திச் சொன்னன்.

புன் கமரத்தின் புதுத் தளிரும், இனிய நிழலும், எழிலார்ந்த மணலும், குயிலும், மாம்பொழிலும், ஊர் களும் ஆகியவற்றைப் பற்றிப் பேசிய பேச்சிளுலே தன்னுடைய இன் பத் தெய்வத்தின் உள்ளத்தில் தைரியத் தையும் மகிழ்ச்சியையும் ஊட்டினன் காதலன். அவள் அதைக் கேட்டு ஆறுதல் பெற்ருள். அவைேடு ஒன்றிச் செல்வதே தனி ஆனந்தமல்லவா?

அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள் வழிபடு தெய்வம் கட்கண் டாஅங்கு ஆலமரல் வருத்தம் தீர, யாழநின் நலமென் பணத்தோள் எய்தினம்; ஆகலின், பொரிப்பூம் புன்கின் எழில்தகை ஒண்முறி சுணங்கு அணி வனமுலை அணங்குகொளத் திமிரி நிழல்காண் தோறும் நெடிய வைகி $ மணல்காண் தோறும் வண்டல் தைஇ வருந்தாது ஏகுமதி வால்எயிற் ருேயே! மானே கொழுதி மகிழ்குயில் ஆலும் நறுந்தண் பொழில் கானம்; குறும்பல் ஊரயாம் செல்லும் ஆறே.