பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மனே விளக்கு

  • சோர்வு இல்லாதவராகி வழிபாட்டு வகை களாகிய முயற்சியைச்செய்யும் ஆர்வத்தையுடைய அன்பர் கள் தாம் வழிபடுகின்ற தெய்வத்தைத் தம் புறக்கண் முன்னே கண்டால் வருத்தம் தீர்ந்து இன்பம் அடைதல் போல, களவுக்காலத்தில் பலநாள் நாம் பட்ட மனச்சுழற் சியும் வருத்தமும் தீரும்படியாக உன்னுடைய அழகும் மென்மையும் பருமையும் உடைய தோளை அடைந்தோம் . ஆகையால் பொரியைப் போன்ற பூவையுடைய புன்க மரத்தின் அழகையும் பளபளப்பையும் உடைய தளிரைப் பொற்பிதிர் போன்ற சுணங்கை அணிந்த அழகையுடைய நகில்களில் அதற்குரிய தெய்வம் இருக்கை கொள்ளுமாறு அப்பி, நிழலைக் காணும்போதெல்லாம் நெடுநேரம் அங்கே தங்கி, மணலைக் காணும்போதெல்லாம் விளையாட் டி.டத்தை அமைத்து விளையாடி வருத்தமடையாமல் செல்; தூய வெண்மையான பற்களை உடையவளே! மாமரத்தின் அரும்பைக் கோதி மகிழ்கின்ற குயில்கள் கூவுகின்ற நறுமணம் வீசும் தண்ணிய பொழில்களையுடையன, நாம் செல்லும் வழியில் உள்ள காடுகள்; சிறிய பல ஊர்களை உடையவை, நாம் போகும் வழிகள்.

ஆர்வ மாக்கள் கண்டாஅங்கு, தோள் எய்தினம்; திமிரி, வைகி, தைஇ, ஏகுமதி; கானம் பொழில; ஆறு ஊர என்று கூட்டுக.

அழிவு-சோர்வு. ஆர்வம்-ஆவல். அலமரல்-மனம் சுழ லுதல்; கவலைகொள்ளுதல். யாழ: அர்த்தமில்லாத அசைச் சொல்; பாட்டின் ஒசைக்காகப் போடுவது. நலம்- அழகு. பணை-பெருமை; மூங்கிலைப்போன்ற என்றும் சொல்லலாம். தகை-இயல்பு. முறி-தளிர். சுணங்கு-மகளிர் மேனியிலே பொன்னிறமாகக் காணும் அழகுத் தேமல். வனம்-அழகு. அணங்கு-தெய்வம்; நகில்களில் வீற்றுத் தெய்வம் என்ற பெண் தெய்வம் இருப்பதாகச் சொல்வது மரபு. திமிரிஅணிந்து; அப்பி. நெடிய-நெடு நேரங்கள். வைகி-தங்கி,