பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபடு தெய்வம் 29

வண்டல்-விளையாட்டு, தைஇ-அமைத்து. ஏகுமதி-போ, வால் எயிற்ருேய்-வெண் பற்களை உடையவளே. நனைஅரும்பு. கொழுதி-கோதி. ஆலும்-கூவும். பொழிலசோலைகளை உடையன. ஆறு-வழி. * -

"உடன்போகா கின்ற தலைமகன் தலைமகட்கு உரைத்தது' என்ற துறையில் அமைந்த பாட்டு இது. தலைவியை அழைத்துக் கொண்டு தலைவன் செல்வதை உடன்போக்கு என்று சொல்வார்கள்.

இதைப் பாடியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் அரசர்.

இது நற்றிணையில் ஒன்பதாவது பாட்டு.