பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலுழ்ந்தன சுண்

கிளவின் பத்தை நுகர்ந்து வந்த காதலர்களுக்கு இடையீடில்லாமல் கணவனும் மனே i யுமாக இருந்து இன்புற வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது. ஒரு நாளைப் போலவே நள்ளிருளில் கரடுமுரடான வழியில் தான் வருவ தைக் காதலன் பொருட்படுத்தவில்லை. அவளோ, அவ னுக்கு ஏதேனும் இடையூறு நேர்ந்தால் என் செய்வது என அஞ்சிள்ை. இனி வரவேண்டாம் என்று சொல்லி, அவன் வருவதை நிறுத்தலாமா? அப்புறம் அவள் வாழ் வதே அரிதாகிவிடும். அவனைப் பிரிந்து வாழ்வது என்பது நினைப்பதற்கும் அரிய செயல். எத்தனை நாளேக்குத்தான் பிறர் அறியாமல் அவர்கள் சந்திப்பது? எப்படியா து மணம் புரிந்துகொண்டு உலகறிய ஒன்று பட்டு வாழ ம் என்ற எண்ணம் மேல் ஓங்கியது.

அவனுக்கு அவளை மணம் செய்து கொடுக்க அ.ை ளுடைய தாய்தந்தையர் உடம்படுவார்களோ என்ற ஐயம் எழுந்தது. ஒருவருக்கும் தெரியாமல் அவளே அழைத்துக் கொண்டு தன் ஊருக்குச் சென்று மணந்துகொள்ளலாம் என்று அவன் எண்ணினன். தோழி அது நல்ல வழி என்ருள். காதலியும் இணங்கிள்ை.

ஒருநாள் விடியற் காலேயில் புறப்பட்டுவிடுவது என்று திட்டம் போட்டிருந்தார்கள். ஆனல் அவர்கள் புறப்பட வில்லை. காரணம் இதுதான்.

காதலி தன் வீட்டைப் பிரிந்து செல்வதற்கு ஏற்ற மன உறுதி இல்லாமல் இருந்தாள். தான் பழகிய இடத் திலும் பழகிய பொருள்களின்மேலும் பழகிய தோழிமார்