பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலுழ்ந்தன கண் 31

களிடத்தும் அவளுக்கு இணையற்ற பற்று இருந்தது. அந்தப் பற்றே அவளைத் தடுத்து விட்டது.

இறுதிக் கணம் வரையில் அவள் எப்படியும் போய் விடுவது என்றே நினைத்தாள். அதற்கு வேண்டிய காரியங் களையும் செய்தாள். விடியற் காலத்திலே எழுந்து விட்டாள். சர் சர்’ என்று அயல் வீடுகளில் தயிர் கடையும் ஒலி அவள் காதில் விழுந்தது.

பெண்டிர் விடியற் காலத்திலே எழுந்து தயிர் கடைவார்கள். முதல் நாள் நன்முகத் தேய்த்துக் கழுவின பானேயிலே பாலைக் காய்ச்சி இரவில் பிரை குற்றுவார்கள். அந்தப் பானை வயிறு அகன்றதாய் நிறைந்த கருப்பம் உடையது போல இருக்கும். கமஞ்சூலையுடைய குழி: அது, எவ்வளவோ காலமாக அந்தப் பானையில்தான் தயிரைத் தோய்த்துக் கடைந்து வருகிருர்கள். அது ஆகிவந்த பானே. மாமியார் கடைந்தது; மருமகள் கடைந்தது; மறுபடி மருமகள் மாமியாராகிக் கடைந்தது; அவள் மருமகள் கடைந்தது. அந்தத் தயிர்ப் பானை அந்தக் குடும்பத்தின் பழமையையும், சுறுசுறுப்பையும், முயற்சி யையும், வளப்பத்தையும் எடுத்துக் காட்டும் <£} Gö? L„ {LtfrsMftið போல விளங்குவது. .

ஒரே பானையில் தயிரைத் தோய்த்துவைத்தால் அதில் புளித்த நாற்றம் உண்டாகும்; தயிரின் முடைநாற்றம் ஏற்படும். வெயிலிலே காய வைப்பதோடு கூட, அந்த முடை நாற்றம் மாறுவதற்கு முறிவாக அவர்கள் ஒரு காரியம் செய்வது வழக்கம். விளாம்பழத்தை அதற்குள் இட்டு மூடி வைப்பார்கள். பிறகு அதை எடுத்தால் கம் மென்று விளாம்பழ வாசனை வீசும். முடை நாற்றம் அடியோடு போய்விடும். அதில் பாலேக் காய்ச்சித்