பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மனை விளக்கு

தோய்த்தால் அந்தத் தயிருக்கே ஒர் இனிய வாசனை உண்டாகும். விளாம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசி அல்லவா அது?

இதோ ஒரு வீட்டில் தயிர் கடைந்து வெண்ணெய் எடுக்கிருள் ஒரு மங்கை. அதைச் சற்றுக் கவனிக்கலாம். அவள் முன்னே தயிர்ப் பானை இருக்கிறது; விளாம்பழ வாசனை வீசும் குழிசி, கமஞ்சூ ற் குழிசி. ஒரு கம்பம் நட்டிருக்கிரு.ர்கள். அதில்தான் மத்தைப் பூட்டி அந்த மங்கை கடைகிருள். மத்தின் கோல் தேய்ந்திருக்கிறது. கயிற்ருல் கடைந்து கடைந்து அப்படித் தேய்ந்துவிட்டது. எவ்வளவு காலமாக அந்த மத்து இருக்கிறதோ, யார் கண்டார்கள்? யாரேனும் துட்பமான ஆராய்ச்சி வல்ல வர்கள் அதன் தேய்மானத்தை அளவெடுத்து, இத்தனை காலம் இது வெண்ணெய் எடுக்கும் வேலையைச் செய்து வருகிறது என்று சொல்லலாம். அப்படி ஆராய்ச்சி செய் கிறவர்கள் யாராவது இருக்கிருர்களா, என்ன? கயிறு தின்று தேய்ந்துபோன தண்டையுடைய மத்தைக் கம்பத் திலே பூட்டி அந்தப் பெண் கடைகிருள். வெண்ணெய் எடுப்பதற்காகக் கடைகிருள். அந்த மத்துச் சுழல்கிறது நெய்யை எடுப்பதற்கு இயங்குகிறது; அது கெய் தெரி இயக்கம், விடியற் காலையில் பலர் இன்னும் துயின்று கொண்டிருக்கும் நேரத்தில் இந்த நெய் தெரி இயக்கம் நடைபெறுவதால் அதன் ஒலி தெளிவாகக் கேட்கிறது. அந்தக் கம்பத்தின் அடியிலே முழங்குகிறது தயிர் கடையும் சத்தம், இருள் பிரியும் நேரம் அது என்பதை அந்தச் சத்தமே சொல்கிறது. அந்தப் பெண்மணிக்குத்தான் எத்தனை சுறுசுறுப்பு!

- ★

தங்கி நின்ற இரவு புலரும் விடியற்காலமாகிய அந்த

வைகு புலர் விடியலில் நெய் தெரியும் இயக்கம் முழங்குவ தைக்கேட்டுக் காதலி எழுந்தாள். முன்னலே திட்டமிட் ட