பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலுழ்ந்தன கண் 33

படி தன் காதலனுடன் புறப்பட எண்ணியே எழுந்தாள். அவள் போகும் செய்தி உயிர்த் தோழி ஒருத்திக்குத்தான் தெரியும்; வேறு யாருக்கும் தெரியாது.

அந்த இரவெல்லாம் அவளுக்குத் தூக்கம் இருந்திருக் குமா? தன் காதலனுடன் என்றும் பிரியாமல் இணைந்து வாழும் இன்ப உலகத்துக்கல்லவா அவள் செல்லப் போகிருள்? யார் கண்ணிலும் படாமல் புறப்படவேண் டுமே என்று கவலை கொண்டாள். உடம்பையெல்லாம் போர்த்துக் கொண்டு வழி நடக்கவேண்டும் என்று தீர் மானம் செய்தாள். அவள் காலில் உள்ள சிலம்பு நடக்கும் போதே கல் கல் என்று ஒலிக்கும். அதற்குள் பரல்கள் இருந்தன; பரலுக்கு அரி என்று ஒரு பெயர் உண்டு. அரி யமை சிலம்போடு நடந்தால் அவள் செல்வதைச் சிலம்பே விளம்பரப்படுத்திவிடும். அதைக் கழற்றி வைத்துவிட வேண்டும் என்று நினைத்தாள்.

கொஞ்சம் கண் மூடியும் சிறிது நேரம் தூங்கியும் நெடு நேரம் யோசனையுள் ஆழ்ந்தும் அவள் படுத்திருந்தபோது தயிர் கடையும் ஒலி காதில் பட்டது. விடியற்காலம் ஆகி விட்டது என்று எழுந்தாள். ஒருவரும் அறியாமல் ஒரு நீண்ட போர்வையை எடுத்துத் தன் உடம்பு முழுவதை யும் போர்த்துக் கொண்டாள் அரிகள் அமைந்த தன் சிலம்புகளைக் கழற்றிள்ை. அவற்றை எங்கே வைக்கலாம் என்று யோசித்தாள். அவள் விளையாடும் கருவிகளெல் லாம் ஓரிடத்தில் இருந்தன. அங்கே வைக்கலா மென்று போனுள். தன்னுடைய தோழிமார்களுடன் பந்து விளை யாடுவதில் அவளுக்கு மிக்க விருப்பம். அழகான பந்துகள் அவளிடம் இருந்தன. பல வகை அழகோடு கூடிய பல பந்துகளை அவள் வைத்திருந்தாள். இறுக்கிக் கட்டிய பந்து கள் அவை. அந்தப் பந்துகளோடு சேர்த்து இந்தச் சிலம்பு களை வைத்துவிடலாம் என்று எண்ணிக் கழற்றிய சிலம்பு களைக் கையில் எடுத்துக்கொண்டு சென்ருள்.

மனே-3 • . . . . .