பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலுழ்ந்தன கண் 35

களே! அதை நினைக்கும்போதுதான் அவளுக்கு என்னவோ போல் இருந்தது. மனசுக்குச் சமாதானம் தோன்றவில்ஜல. பல நாட்களாக ஒன்றுபட்டுப் பழகிய ஆயத்தோர்கள் அல்லவா அவர்கள்? அவர்கள் தன் பிரிவால் நொந்து அரற்றுவார்களே! அவர்களுக்குக் காதலியின் நிஜல் தெரி யாதே அவர்கள் வருந்துவதை நினைத்தால் உள்ளம் இரங்குகிறது. அவர்கள் மிகவும் அன்புடையவர்கள்; பாவம் ஏங்கிப் போவார்கள். அளியரோ அளியர்! இரங்கத்தக் கவர்கள்.

இந்த நினைப்பு வந்ததோ இல்லையோ, காதலிக்கு ஊக்கம் குறைந்தது. திட்டமிட்டபடி எல்லாவற்றையும் செய்தவள், இப்போது வாட்டம் அடைந்தாள். அவள் கால் எழவில்லை. காதலனுடன் இடையூறின்றி இன்புற்று வாழலாம் என்று எண்ணி அடைந்தபெருமிதம் இப்போது எங்கோ ஒளித்துக்கொண்டது. அவள் உள்ளத்தே துயரம் வந்து கப்பிக் கொண்டது. அவளையும் அறியாமல், அவ ளுடைய உறுதியையும் மீறி, அவள் கண்களில் நீர்த் துளிகள் புறப்பட்டன. மயங்கி நின்ருள்.

அவள் எழுந்தது முதல் அவளே ஒருத்தி கவனித்துது கொண்டே இருந்தாள். அவள் வேறு யாரும் அல்ல; அவளுடைய உயிர்த்தோழி. தலைவனுடன் அவளை வழி யனுப்புவதற்கு வேண்டிய காரியத்தைச் செய்தவன் அவளே. அவள் தலைவியைக் கவனித்தாள். சிலம்பை, கழற்றும்வரைக்கும் அவளுக்கு இருந்த ஊக்கம், வரிப்பு: பந்தைக் கண்டபோது இல்லாமற் போனதையும் அவள் கண்கள் கலுழ்வதையும் கண்டாள்.

மெல்லச் சென்று அவளை அணுகிளுள். தலைவனுடன் செல்வதற்கு அவள் மனம் விரும்பினலும், பழகிய இடத் தைப் பிரிவதற்குரிய துணிவு அவளுக்கு இல்ல்ை என்பதைத் தோழி உணர்ந்து கொண்டாள். அவள் முதுகைத்