உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மனை விளக்கு

தடவித் தலையைக் கோதி ஆறுதல் செய்தாள். நீ வருந்தாதே; இங்கிருந்து நீ போக வேண்டாம். உன் காதலனை ஏற்றுக் கொண்டு மனம் செய்து கொடுக்கும் படி செவிலித் தாய்க்குக் குறிப்பாகத் தெரிவிக்கிறேன்; உன் உள்ளம் கொள்ளை கொண்டவன் இன்னுன் என்பதை வேறு சந்தர்ப்பத்தில் தந்திரமாக அவள் உணரும்படி செய் வேன். நீ படுத்துக்கொள்' என்று சொல்வி, அவள் காலில் மீட்டும் சிலம்பை அணிந்தாள். தடுமாறும் உள்ளத்தோடே தலைவி தன் பாயலில் வந்து படுத்தாள்.

வெளியில் தலைவன் நின்று கொண்டிருந்தான். தன் காதலியை அழைத்துச் செல்லும் நோக்கத்தோடு அவளை எதிர்பார்த்து மறைவான ஒரிடத்தில் காத்துக் கொண் டிருந்தான். தோழி அங்கே சென்ருள். காதலியைக் காணுமல் அவளை மட்டும் கண்ட தலைவன், "அவள் எங்கே?' என்று கேட்டான். அவள் வருவதாகத்தான் இருந்தாள். ஆளுல்..." சிறிது நிறுத்தினுள். தலைவன் ஆவலோடு கேட்கலாளுன் ,

'விடியற் காலையில் எழுந்து யாரும் அறியாமல் புறப்படலாளுள். காற் சிலம்பைக் கழற்றிப் பந்தோடு வைக்கப்போனுள்; உம்மோடு வருவதில் முழு கனமும் உடையவளாய் எல்லாவற்றையும் செய்தாள். பந்தைக் கண்டவுடன் ஆயத்தோர் நினைவு வந்துவிட்டது போலும்! காலையில் அவர்கள் இவற்றைப் பார்த்து எப்படி யெல்லாம் வருந்துவார்கள் என்ற எண்ணம் மேலோங்கி யிருக்க வேண்டும். அவளும் எவ்வளவோ அடக்கி அடக்கிப் பார்த்தாள். ஆளுல் அவள் கண்கள் அதையும் மீறி அழுது விட்டன. அவளுக்கு உடம்பாடுதான்; ஆலுைம் அழுத கண்ணுேடு புறப்படலாமா? :

தலைவன் தலைவியின் பூப்போன்ற உள்ளம் புண்படக் கூடாதென்று நினைக்கிறவன். தோழி கூறியதைக் கேட்டு என்ன செய்வதென்று தெரியாமல் மலங்க மலங்க விழித்