பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தப்பினேன் !

காதலனும் காதலியும் வீட்டுக்குப் புறம்பே தினப் புனத்தில் சந்தித்து வந்தார்கள். இந்தக் களவுக் காதல் தலைவியினுடைய உயிர்த் தோழிக்கு மாத்திரம் தெரியும். அயலார் அறியாமல் அவர்கள் சந்தித்துக் குலவுவதில் பல இடையூறுகள் இருந்தன. ஒவ்வொரு நாளும் தலைவன் வந்து போவதென்பது இயலுவதா? அவன் எத்தனையோ பொறுப்புள்ள கடமைகளை மேற்கொண்டவன். அவற் றைக் கவனிக்கும் நிலையில், சில நாட்கள் வந்து தலைவியைச் சந்திக்க முடிவதில்லை.

தலைவன் பகற்பொழுதில் வீட்டுக்குப் புறத்தே திணைப்புனம் முதலிய இடங்களில் தலைவியைச் சந்தித்து அளவளாவுவதைப் பகற்குறி என்று சொல்லுவார்கள். பகற் காலத்தில் குறித்த இடத்தில் சந்திப்பதால் இத்தப் பெயர் வந்தது. இந்தக் களவுக் காதல் ஒவ்வொரு நாளும், பிறர் அறிந்து விட்டால் என் செய்வது?’ என்ற அச்சத்தை உண்டாக்கும். அன்றியும், தவைன் வராத நாட்களில் அவனைக் காணுமையால் தலைவி மிக்க துன்பத்தை அடைந்து ஒரு வேலையிலும் மனம் செல்லாமல் இருப்பாள்.

இவ்வாறு நடுநடுவே தலைவனைக் காளுமல் வருந்திய தலைவி வீட்டிலே இருந்தான். அவள் உள்ளம் தவை.இாக் காணுத துயரத்தால் நிரம்பியிருந்தது. ஏதேனும் வேலை யில் ஈடுபடலாமென்ருல் ஒன்று கிடக்க ஒன்று செய் யும்படி நேர்ந்தது. மனசை வேறு எதிாைவது திருப்பி விட்டு ஆறுதல் பெறலாம் என்று நினைத்தான்.