பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மனே விளக்கு

காலையில்தான் நன்முக மழை பெய்தது; கனமான மழை அவள் வாழ்வது குன்றுகள் அடர்ந்த குறிஞ்சி நிலம். எதிரே கம்பீரமாக ஒரு குன்று நின்றது. அந்தக் குன்றி லிருந்து அருவி சலசலவென்று விழுந்து கொண்டிருந்தது. அதைப் பார்க்கப் பார்க்க உள்ளத்தில் களி துளும்பும். அந்த அழகிய குன்றமும் அதில் உள்ள அருவியும் மலைச் சாரலிலும் மலையடிவாரத்திலும் உள்ள அடர்ந்த காடு களும் மிக அழகான காட்சியை அளித்தன. இயற்கை யழகில் ஈடுபடும் உள்ளமுடையவர்கள் நேரம் போவதே தெரியாமல் அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

இந்தத் தலைவி அழகிய பொருள்களிலே மோகம் உள்ளவள். அழகான காட்சிகளிலே உள்ளத்தைச் சிக்க விடுபவள். தலைவனுடைய அழகிலே மயங்கிப் போனதே, இந்த அழகுக் காதலால்தான் என்று கூடச் சொல்லலாம்.

இப்போது மனசில் உள்ள கவலையைப் போக்கச் சற்று நேரம் மலையையும் அருவியையும் பார்த்து இன்புறலா மென்று வெளியிலே வந்தாள். சலசலவென்று ஒடிய அருவி பெரிய அலைகளை வீசும் கடலைப் போல முழங்கிக் கொண்டிருந்தது. காலையிலே மழை பெய்ததுதான் காரணம். அந்தக் குன்றம் அங்குள்ளாருக்குப் பல வகை யில் நன்மை செய்யும் நல்ல குன்றம்; உயர்ந்த குன்றம்; நன்னெடுங் குன்றம். அதன்மேல் அன்று காலை மழை பெய் யவே, அருவி கடலில் திரை ஆரவாரிப்பது போல் ஒலித் துக் குன்றிலிருந்து இழிந்து வந்தது. அதைப் பார்த்தாள். அந்த அருவி கீழே வந்து காட்டினுள்டே மறைந்தது. நல்ல நீர்வளம் இருப்பதனால் அந்தக் காடு மரங்கள் அடர்ந்து விரிவாக இருந்தது. அகன்று பரந்த கானத்தில் உள்ள அழகை அவள் பார்த்தாள் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

மனம் அந்த அழ்கிலே மயங்கிக் க்வலையை மறக்கும் - என்றெண்ணியே அங்கே வந்தாள். நாள்தோறும்