பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தப்பினேன்! 41

காணும் அழகைவிட இன்று குன்றமும் அருவியும் கானமும் மிக்க அழகோடு விளங்கின. நாள் மழை (காலை மழை) பெய்தமையினல் இயற்கையாக அவற்றிற்கு இருந்த அழகு பின்னும் அதிகமாயிற்று. அவள் உள்ளத்தில் கவலை இல்லா மல் இருந்தால் இந்த அற்புதமான காட்சியிலே சொக்கிப் போயிருப்பாள். ஆனல் இன்று எதையும் கண்டு களிக்கும் மன நிலை அவளுக்கு இல்லை. அருவியின் அழகும் குன்றத் தின் கோலமும் கானத்தின் கவினும் அவள் உள்ளத் தினு .ே புக இயலவில்லை. அங்கேதான் துயரம் குடி கொண்டிருக்கிறதே! உலகமே இப்போது அவளுக்குச் சுவைக்கவில்லை. காதலனைக் காணுது வாழும் நாள் நல்ல நாள் அன்று; பொல்லாத நாள்; உள்ளம் சாம்பும் நாள்: உயிர் போகும் நாளைப் போன்ற நாள்.

கண் குன்றத்தைப் பார்த்தது; கருந்தோ காதலனைக் காணுத துன்பத்தை நினைந்தது. எதிரே அருவி கடலின் அலையைப் போலப் பேரலைகளே மோதி முழங்கியது; அவள் உள்ளக் கடலும் குமுறியது. அடர்ந்த காடு எதிரே படர்ந்திருந்தது; அவள் உள்ளத்தினு:டேயும் தெளிவின்றி அடர்ந்த துயரம் பரந்திருந்தது.

குன்றத்தை அவள் பார்த்தாள்; அவள் பார்க்கவில்லை; கண்கள் பார்த்தன. அப்படிச் சொல்வது கூடப் பிழை. பார்வையென்பது கண்ணும் உணர்ச்சியும் இணையும்போது நிகழ்வது. கண்ணேத்திறந்திருந்தால் மாத்திரம் போதாது. அது பார்வை ஆகாது. அவளுடைய கண்கள் திறந்திருந் தனவே ஒழிய எதிரே நின்ற குன்றத்தைப் பார்க்கவில்லை: அருவியிலே செல்லவில்லை.

அவள் தன் தலைவனைக் காணுத இடம் எவ்வளவு வளப்

பமுடையதாக இருந்தால் என்ன? அது வெட்ட வெளிக்

குச் சமானம்; பாலைவனத்தைப் போலப் பயனின்றி,

ழகின்றி இருப்பது.