பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மனே விளக்கு

உள்ளத்தில் துக்கம் குமுறிக்கொண்டு வருகிறது; காதலனைச் சந்திக்கவில்லையே என்ற துயரம் பொங்கு கிறது. விம்மி விம்மி அழ வேண்டும்போல் இருக்கிறது. அவள் அந்த உணர்ச்சியை அடக்கிக் கொண்டாள். அடக்க அடக்கத் துயரம் மிகுகிறதே ஒழிய அடங்கினபாடில்லை. துயரத்தைத் தாங்கித் தடை செய்யலாமென்று முயல் கிருள்; அவள் அடக்கும் எல்லையில் அது நிற்கவில்லையே!

பார்த்த கண்களுக்கு இப்போது உண்மையாகவே எதிரே நின்ற காட்சி தெரியவில்லை. அவற்றில் நீர் திரை யிட்டது. சுழன்றது. எழிலே ஏந்திய அந்தக் குளிர்ந்த கண்களில் நீர்த் துளிகள் வட்டமிட்டன. அடக்கிய வரை யில் உள்ளே புதைந்திருந்த துக்கம் கொஞ்சம் உடைப் பெடுத்துக் கொண்டது. இனி அது நிற்குமா? அவள் கண்ணைத் துடைத்துக் கொண்டாள். கண்ணிர் இப்போது மிகுதியாகப் பெருகியது. கண்ணிலே ஒர் அருவியே தோன்றி விட்டது! கண்ணேத் துடைக்கத் துடைக்க நீர் சுழன்று கண்கள் கலுழ்ந்தன.

அந்தச்சமயத்தில் அவளுடைய தாய் அங்கே வந்தாள் . தன் அருமை மகள் கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற் பதைக் கண்டாள். செல்வமாக வளர்த்த பூங்கிளி போன்ற மடமகள் வருந்துவதா?'இவளுக்கு என்ன வருத்த வந்தது?" என்று எண்ணிய தாய் அவளை அணுகிளுள்

"ஏன் அம்மா அழுகிருய்? என்ன செய்தாய்? யார் உனக்குத் துயரத்தை விளைவித்தார்கள்?' என்று அவள் தலையைக் கோதியபடியே கேட்டாள்.

தலைவி தன் கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

"என் கண்ணே! ஏன் இப்படி முகம் வாடி இருக்கிருய்? அழகாக விளங்கும் பற்கள் தோன்றப் புன்முறுவல் பூப்