பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தப்பினேன்! 43

பாயே! எங்கே, உன் இலங்கு எயிற்றைக் காட்டு; ஒரு சின்ன முத்தமிட்டுக் கொள்கிறேன்' என்று கொஞ்சிக் கொஞ்சிக் கூறினுள்; இனிமையாகக் கூறினள். அந்தத் தாய்க்குத் தலைவி இன்னும் சின்னஞ் சிறிய குழந்தைதான்.

தாய் இனிய வார்த்தைகளால் பரிவு தோன்றப் பேசவே, தலைவிக்கு உள்ளம் குளிர்ந்தது. மந்திரம் போடு பவர்களுக்கு முன் நாகம் தலை சாய்ப்பது போலவும் வீணே வாசிப்போருக்கு முன் யானை மதம் தெளிந்து மயங்கி நிற் பது போலவும் இருந்தது, தலைவியின் நிலை. இவ்வளவு அன்புடன் பேசுகிற தாயினிடம் உண்மையைச் சொல்லி விட்டால் என்ன? நம் காதலருடைய பெருமையை எல் லாம் எடுத்துச் சொல்லலாமா?’ என்ற வேகம் உண்டா யிற்று. தம்முடைய காதலைத் தாங்களே எடுத்துச் சொல்லுவது நாணமுள்ள மங்கையருக்கு அழகன்று என் பதை அவள் மறந்தாள். நாணம் உயிரை விடச் சிறந்தது. நாணம் போனுல் உயிர் போய்விடும். அப்படி இருக்க, தாயின் இன்மொழியிலே அந்த நாணத்தை மறந்து வேக மாக உண்மையைச் சொல்லிவிடலாம் என்று நினைத்தாள்.

"அவர் பெரிய மலைக்குத் தலைவர். வானத்தளவும் ஓங்கிய மலையை உடையவர். அந்த மலைச்சார வில் உள்ள காந்தட் பூக்கள்ல் சென்று தாதை ஊதிய நீலமணி போன்ற தும்பிகள் ரீங்காரம் செய்வது வீணை வாசிப்பது போல இருக்கும்; இம்மென்று முழங்கும். அவ்வளவு வளம் பெற்ற மலைக்குத் தலைவர் அவர். அவருடைய மார்பினுல் வந்த வருத்தம் இது என்று சொல்ல முற்பட் டாள். அப்போதிருந்த வேகத்தில் சொல்லியே இருப் பாள். ஆனல்

அவள் உத்தம மகள் அல்லவா? அவள் நாணத்தை ஒட்டினலும் அது அவளே விட்டுப் போகாதே. அது அவளு டன் பிறந்தது அல்லவா? அந்த நாணம் அவள் நாவை