பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மனை விளக்கு

இழுத்துப் பிடித்தது. அவள் தன் கண்ணிரைத் தடுக்க முடியவில்லை; ஆயினும் நாவைத் தடுத் துவிட்டாள். உயிரினும் சிறந்த நாணம் அவளிடமிருந்து அகலாமல் நின் றது. அவள் அதை மறந்தாளே ஒழிய, விட்டுவிடவில்லை. ஆனல் அவளே அது மறக்கவில்லை.

இப்போது விழித்துக்கொண்டாள். 'ஒன்றும் இல்லை அம்மா! அதோ அந்த அருவியைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஏதோ கண்ணில் வந்து பட்டது. அது தான்' என்று சொல்லிச் சமாளித்துக் கொண்டாள். தொண்டை வரையில் வேகமாக வந்துவிட்ட வார்த்தையை அடக்கிக் கொண்டு, அன்னைக்கு வேறு சமாதானம் சொன்னது அவளுக்கே வியப்பை உண்டாக்கியது.

கண நேரம் அவள் ஏமாந்து போளுள், நல்ல வேளை! முற்றும் ஏமாந்து போகாமல் தப்பினுள்; உண்மையை உரைப்பதினின்றும் உய்ந்தாள்.

"ஆல்ை ஒவ்வொரு நாளும்இப்படிச் சாமர்த்தியமாகத் தப்ப முடியுமா?-அவள் மனம் லேதனப்பட்டது.

அன்றைப் பொழுது எப்படியோ கழிந்தது. மறு நாளாவது தன் காதலனைக் காணலாம் என்று அவள் எண் ணிையிருந்தாள். அன்று அவள் எதிர்பார்த்தபடியே அவன் வந்தான். தோழியோடு கானத்துக்குள் சென்று அவனேச் சந்தித்தாள். தான் அவனைக் காணுத பொழுது படும் துன்பத்தையும், அதைத் தாய் அறிந்து கேள்வி கேட்பதை யும் அவளுக்கு உண்மையை மறைத்து வேறு கூறுவதில் உண்டாகும் சங்கடத்தையும் அவனுக்கு உணர்த்த வேண் டும் என்று விரும்பினுள். அவன் உணர்ந்தானல்ை, இனி யும் பலநாள் களவிலே வந்து குலவுவதை நீக்கி, மணம் செய்து கொள்வதற்கு உரியவற்றைச் செய்வானென்பது அவள் நினைவு.