பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தப்பினேன் !

45


ஆனால் இந்தச் செய்தியை அவனிடம் நேர்முகமாகக் கூற நாணினாள். தான் படும் துயரையும் மற்ற இன்னல் ளையும் அவன் அறிவது இன்றியமையாதது என்றும் நினைத்தாள். ஆகவே, அவன் அயலில் மறைவாக நிற்கும் போது தன் தோழிக்குச் சொல்பவளைப்போல முதல் நாள் நிகழ்த்தவற்றைற் சொல்லலானாள்.

நாள்மழை தலைஇய நன்னெடுங் குன்றத்து
மால்கடல் திரையின் இழிதரும் அருவி
அகல்இருங் கானத்து அல்கணி நோக்கித்
தாங்கவும் தகைவரை நில்லா, நீர்சுழல்பு
ஏந்துஎழில் மழைக்கண் கலுழ்தலின், அன்னை,
‘எவன்செய் தனையோரிகின் இலங்கெயிறு உண்கு’என
மெல்லிய இனிய கூறலின், வல்விரைந்து
உயிரினும் சிறந்த நாணும் நனிமறந்து
உரைக்கல்உய்ந் தனனே, தோழி, ’சாரல்
காந்தள் ஊதிய மணிகிறத் தும்பி
தீந்தொடை நரம்பின் முரலும்
வான்தோய் வெற்பன் மார்பு அணங்கு’ எனவே.

★ தோழி, காலை மழை பெய்த நல்ல உயர்ந்த குன்றத் தில் பெருமையையுடைய கடலின் அலையைப் போல இறங்கி வரும் அருவி அகன்ற பெரிய காட்டிலே சென்று தங்கும் அழகைப் பார்த்துத் துயரைத் தாங்கி நிற்கவும், நான் தடுக்கும் எல்லையிலே நில்லாதனவாக நீர் சுழன்று அழகை ஏந்திய குளிர்ச்சியையுடைய கண்கள் அழுததனால் என் தாய், ‘என்ன செய்தாய்? உன் பல்லை முத்தமிடுவேன்' என்று மென்மையான இனிய சொற்களைச் சொன் னமையால், நான் மிக விரைந்து உயிரைக் காட்டிலும் சிறந்த நாணத்தையும் மறந்துவிட்டு, ‘சாரலிலே உள்ள காந்தள் மலரை ஊதிய தும்பியென்னும் உயர் சாதி வண்டு இனிய யாழ் நரம்பின் ஓசைபோல ரீங்காரம் செய்யும் வான் அளாவிய மலைக்குத் தலைவனாகிய என் காதலனு