பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மனே விளக்கு

டைய மார்பு செய்த வருத்தம் இது என்று சொல்ல வந் தவள், அவ்வாறு சொல்லாமல் தப்பினேன்.

தோழி, கண் நோக்கி, நில்லா, கலுழ்தலின், அன்ன எனக் கூறலின், என உய்ந்தனன் என்று கூட்டுக.

நாள் மழை-கால மழை. தலே இய-பெய்த மால்பெருமை இழிதரும்-மேலிருந்து கீழே ஓடிவரும். கானம்காடு. அல்கு-தங்கும்; வேகமாக ஓடாமல் மெல்லச் செல் வதை இவ்வாறு சொன்னுள். தகைவரை-தடுக்கும் எல்லை யில், சுழல்பு-சுழன்று. மழைக்கண்-குளிர்ச்சியை உடைய கண்கள். கலுழ்தல்-அழுதல். எவன் என்ன. இலங்குவிளங்குகின்ற. எயிறு-பல்லே. உண்கு-உண்பேன். வாயில் முத்தமிடுவேன் என்பதையே எயிறு உண்கு’ என்று சொன்ஞள். இனிய-இனிமையான வார்த்தைகள். வல் விரைந்து-மிக விரைந்து-தனிமறந்து-நன்முக மறந்து விட்டு. உரைக்கல் உய்ந்தனன்-உரைத்தலின்றும் தப்பி னேன். காந்தள் குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்:கண்வலிப்பூ என்று சொல்வதுண்டு. மணி-நீலமணி. தும்பி-உயர்ந்த சாதி வண்டு. தீந்தொடை நரம்பு-கட்டிய நரம்புகளே யுடைய யாழின் இனிய ஓசை; தொடை-கட்டு; இங்கே யாழைச் சுட்டியது. நரம்பின்-நரம்பைப்போல. முரலும்ஒலிக்கும். வான் தோய்-வானத்தைத் தொடும். மார்பு ஆணங்கு-மார்பில்ை உண்டான வருத்தம்.*

முன்னிலைப் புறமொழியாகத் தலைமகள் தோழிக்குச் சொல் லியது' என்பது இதற்குரிய துறை. 'தலைவன் முன்னே நிற் கவும் அவனை நேரே பார்த்துச் சொல்லாமல் வேறு ஒரு வருக்குச் சொல்லும் பாணியில் தலைமகள் தோழியிடம் சொல்லியது' என்பது இந்தத் துறைக்குப் பொருள்.

இதைப் பாடிய புலவர் கொச்சி நியமங்கிழார் என்பவர்; நொச்சி நியமம் என்ற ஊர்க்காரர் என்பது அதற்குப்