பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மனே விளக்கு

தோழி : மிகவும் தந்திரம் கற்ற மந்தி. அது குறத்தியர் அயர்ந்திருக்கும்பொழுது தினேக் கதிரைப் பறித்துக் கொண்டு போய்விடும்!

தலைவி பறித்துக்கொண்டா போகும்?

தோழி : ஆம். கொடிச்சி காக்கும் அடுக் கலில் உள்ள பைந்தினையில் முதல் முதலில் விளைகின்ற கதிர்களை அவை: கொண்டுபோய்விடும்! -

தலைவி 1 கொண்டுபோப் என்ன செய்யும்?

தோழி : முந்து விளைந்த பெருங் கதிரைக் கொண்ட மந்தி,தன்

கணவனகிய கடுவைேடு மலைமேல் தாவி ஏறும்.

தலைவி : மந்திதான் திணைக்கதிரைப் பறிக்குமோ?

தோழி அதற்குத் தான் மெல்லப் பறிக்கத் தெரியும். அவசரப்பட்டு அடி வாங்கிக் கொள்ளாது. அப்படித் திருட்டுத்தனமாகப் பறிக்கக் கற்ற மந்தி அது. ஆனல் ஆண்குரங்காகிய கடுவனே, இதைப் பார்த்துக் - கொண்டே இருக்கும். இந்தத் தந்திரத்தை அது கற்றதில்லை; அது கல்லாக் கடுவன். கதிரைப் பறித்த மந்தி உடனே கடுவைேடு மலைமேலே ஏறிவிடும்.

தலைவி : பிறகு?

தோழி நல்ல வரைமேல் ஏறி ஓரிடத்தில் மந்தியும் கடுவ

னும் அமர்ந்து கொள்ளும்.

தலைவி : அவற்றிடையே உள்ள காதல் எவ்வளவு அழ

கானது!

தோழி ஆம்; உலகமே காதல் நிறைந்ததுதான். மந்தி அந்தக் கதிரை உள்ளங்கையிலே வைத்து நிமிண்டித்