பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாமத்து மழை 49

தோழி : அங்கும் மலைச்சாரல்களில் பசிய தினைப்பயிரை மலைநாட்டு மக்கள் விளைவிப்பார்கள். அடுக்கலிலே விளையும் அந்தத் தினையைக் குறமகளிர் காவல் புரிவார்கள்.

தலைவி : நாம் காத்தோமே, அது மாதிரியா?

தோழி 1 ஆம்; அதே போலத்தான். ஆனல் பைந்தினை யைக் காக்கும் கொடிச்சியர் யாவருக்கும் உனக்குக் கிடைத்த ஊதியம் கிடைக்குமா? நீதான் உன் காத லனைத் திணைப்புனத்தைக் காவல் செய்கையில் பெற் முய். (சிரிக்கிருள்).

தலைவி ! (நாணத்தோடு) சரி சரி; அவர்களுக்கு என்ன

தான் கிடைக்கும்?

தோழி : அற்புதமான காட்சிகள் காணக் கிடைக்கும். எவ்வளவுதான் ஊக்கத்தோடு காவல் புரிந்தாலும் ஏமாற்றந்தான் கிடைக்கும்.

5ు : அது என்ன? ஏ மாற்றம் கிடைப்பதாவது?

தோழி 1 ஆம்; கவனெறிந்தும் தட்டையைத் தட்டியும் கிளிகளை ஒட்டிக் காவல் புரியும் அந்தக் கொடிச்சிய ரைச் சில விலங்குகள் ஏமாற்றிவிடும். -

தலைவி : யானையையா சொல்கிருய்? - -

தோழி : யானையைக் கொடிச்சியர் என்ன செய்யமுடியும்? கானவர் அம்பு எய்து அல்லவா அதை ஒட்ட வேண்டும்?

தலைவி பின்னே நீ எந்த விலங்கைச் சொல்கிருய்?

மனே-4 .