பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாமத்து மழை

தோழி : உன்னுடைய காதலன் பெரிய வளப்பம் மிக்க மலை நாட்டை உடையவன்; இயற்கை எழில் குலுங்கும் மலைகளே உடையவன்.

தலைவி : அப்பெருமானுடைய அன்பு வளத்தை நான் அறிவேன். அவருடைய ஊரை யார் அறிவார்கள்? நாட்டைத்தான் யார் அறிவார்கள்?

தோழி : நீதான் அறிந்துகொள்ளப் போகிருயே!

தலைவி : அது எவ்வாறு? அவர் இன்னும் திருமணத்துக்கு

உரிய முயற்சிகளைச் செய்யாமலே இருக்கிருரே!

தோழி : அதைப்பற்றி நீ ஏன் கவலை அடைகிருய்? அவனு டைய கடமையை அவன் மறக்க மாட்டான். உனக்கு வேண்டிய பரிசத்தைக் கொண்டுவந்து, உன்னுடைய தாய் தந்தையரிடம் வழங்கி, உன்னை மணம் செய்து கொடுக்க வேண்டுமென்று கேட்பான். முதியோர் களை முன்னிட்டுக் கொண்டு வரைந்துகொள்ள வரு வான்.

தலைவி அவருடைய நாட்டின் வளப்பத்தைச் சொல்ல வந்தாயே! அவர் எவ்வகை நிலத்துக்குத் தலைவர்?

தோழி : குறிஞ்சிநிலத் தலைவன்; மலை நாடன்.

தலைவி : நாமும் குறிஞ்சி நிலத்தில் வாழ்கிருேம். இங்குக்

கள்வர்களைப்போல அங்கும் மகளிர் உண்டோ? தினை கொல்லைகள் உண்டோ?