பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாமத்து மழை 55

தேய்த்து. திரை -சுருங்கிய அனல்-தாடை, கன்னத்தின் கீழ்ப்பகுதி கொடுங்கவுள்-வளைந்த கன்னம், முக்கிஉண்டு; இப்போது மொக்கி என்று வழங்குகிறது. பெயல்மழையில். நோன்பியர்-விரதத்தை உடைய துறவிகள். கையூண் இருக்கை-கர தல பிட்சை உண்ணும் கோலம். நாடன்-குறிஞ்சி நிலத் தலைவன். கயம்-குளம்; கண்இடம். பைது அறு காலை-பசுமை அற்ற காலத்தில். பீள்பூட்டை. திரங்கிய-வாடிய. நள்ளென் யாமம்-நடு இரவு. பொழிந்தாங்கு-பொழிந்தாற் போல. *

துறை : இது, வரைவு மலிந்த தோழி தலைமகட்குச் சொல் லியது.

'மணம் செய்வதற்கு வேண்டிய முயற்சியுடன் தலை வன் பெண் பேச வந்த செய்தியை அறிந்த தோழி, அதனைத் தலைவிக்குச் சொல்லியது' என்பது இதன் பொருள் வரைவு மலிதல்-மனத்துக்குரிய முயற்சி பெரு குதல் ஒருத்தியைத் தன் மனைவியென்று உலகு அறிய வரையறுத்து உரிமையாக்கிக் கொள்வதால் மனத்திற்கு வரைவு என்ற பெயர் வந்தது.

இந்தப் பாடலை இயற்றிய புலவர் பெயர் தெரிய வில்லை. -

இது கற்றினையில் இருபத்திரண்டாம் பாட்டு.