பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதன் பண்பு 57

போன பிறகு, தன் கடமையை அவள் உணர்ந்து ஒருவாறு ஆறுதல் பெற்று இருக்கலாம். போகும் செய்தியைக் கேட்கும்பொழுது அம்பு பட்ட மான் போல இடர்ப்படு வாள் என்பது அவனுக்கு நன்ருகத் தெரியும். அவள் முகத்துக்கு நேரே நின்று இந்தச் செய்தியைச் சொல்லி அதனல் அவள் படும் வேதனையைக் கண்ணினல் காண முடியுமா? அதைக் காட்டிலும் துயரந் தரும் செயல் வேறு இல்லை. .

"நாம் பிரிந்து போகத்தான் வேண்டும். அதைத் தவிர்க்க முடியாது. ஆனல் இந்தச் செய்தியை நாமே நேரில் தெரிவித்து, அவள் படும் பாட்டைக் கண்டு மனம் கலங்காமல், வேறு ஏதேனும் வழி செய்யலாமே! பிரிவை உணர்த்தும் வேலையை நாம் ஏன் மேற்கொள்ள வேண்டும்? அவளாகத் தெரிந்து கொள்ளட்டுமே!-அல்லது வேறு யாரிடமாவது இதைச் சொல்லி அவளுக்குச் சொல்லும் Lit?....' .

அவன் இவ்வாறு சிந்தனையில் ஆழ்ந்திருந்த போது அவனுடைய காதலியின் உயிர்த் தோழி அங்கே வந்தாள். அவளைக் கண்டதும் சமய சஞ்சீவியே அவனுக்குக் கிடைத்துவிட்டது போன்ற மகிழ்ச்சி உண்டாயிற்று. 'நல்ல வேளை! நீ வந்தாய்” என்று தன் முகத்தில் புன்ன கையை வருவித்துக் கொண்டே அவளைப் பார்த்துச் சொன்னன்.

'ஏன், என்ன விசேஷம்? நான் இங்கேதானே இருக் கிறேன்? இன்றைக்குப் புதிதாக வந்து குதித்து விட வில்லையே!” என்ருள் தோழி, -

அப்படி அன்று. நான் ஒரு சிக்கலான நிலையில் அகப் பட்டுக் கொண்டிருக்கிறேன். அதை எப்படி நீக்குவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நீ வந்தாய்.”